டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைக்கு மத்திய அரசின் பிடிவாத போக்கும், நமது விவசாய சகோதர சகோதரிகளின் மீதான மத்திய அரசின் அலட்சியமும்தான் காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.
விவசாயிகள் போராட்டங்களின் போது டெல்லியின் தெருக்களில் நடந்த வன்முறை தொடர்பாக தான் மிகவும் கவலை அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார் என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.
குடியரசு தின டிராக்டர் பேரணி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : அதிர்ந்த தலைநகரம்
“இந்த நிலைமைக்கு மத்திய அரசின் அணுகுமுறைதான் காரணம்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
“முதலில், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் கொண்டு வரப்பட்டன. பின்னர், இந்தியா முழுவதும் நடந்த போராட்டங்களையும், இரண்டு மாதங்களாக டெல்லி எல்லையில் முகாமிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல், மத்திய அரசு மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டது.” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளுடன் பேசிய மம்தா பானர்ஜி – போராட்டத்துக்கு திரிணாமூல் ஆதரவு
“மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்த கொடூர சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நடந்த குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது டெல்லியில் வன்முறை வெடித்து. போலீஸ் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.
விவசாயிகளின் குடியரசு தின பேரணியில் நடந்தது என்ன? அரசின் ஊடக பிரச்சாரம் உண்மையா?
இந்த வன்முறையை பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விவசாயிகள் எல்லைக்கு திரும்பி போராட்டத்தைத் தொடரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
பஞ்சாப் சட்டப் பேரவை – வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றம்
“இன்று நடந்ததை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், அவை ஏன் நடக்கின்றன என்பதையும் நாம் புறக்கணிக்க முடியாது. இதுவரை அமைதியாக போராடி வந்த விவசாயிகள் இப்போது கோபமடைந்திருப்பது ஏன் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.