Aran Sei

“விவசாயிகள் மீதான தாக்குதல் பாஜகவின் வன்முறை வெறியாட்டம்” – தொல்.திருமாவளவன்

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை, போலீசார் தாக்கியுள்ளதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி நோக்கிப் பேரணி சென்ற போது ஹரியானா போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதென்று தி வயர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி மற்றும் ஹரியானா இடையேயான சிங்கு எல்லையை அடைந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டு மூலம் தடுத்து நிறுத்தியதாக ஏ.என்.ஐ செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அழைக்கப்பட்ட ‘தில்லி சலோ’ போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பஞ்சாபில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி எல்லையை அடைந்துள்ளனர். இந்தப் போராட்டத்தை ஒடுவக்குவதற்காக ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள பாஜக அரசு 100 க்கும் மேற்பட்ட உள்ளூர் விவசாயத் தலைவர்களைக் கைதுசெய்து, பலரைக் காவலில் வைத்து, மாநிலங்கள் வழியாக விவசாயிகள் பேரணி செல்வதைத் தடுக்க கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சம்யுத் கிசான் மோர்ச்சா மற்றும் அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு (ஏ.ஐ.கே.எஸ்.சி.சி) வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையின்படி, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் கிராமங்களிலும் அரசு அலுவலகங்களிலும் பெரும் போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர் என்றும்  மத்திய அரசு விவசாயத் திருத்தச் சட்டங்கள் மற்றும் மின்சார மசோதாஆகியவற்றைத் திரும்பப் பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இருந்து சென்ற பேரணிகள், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன என்றும் விவசாயிகள் தொடர்ந்து நாட்டின் தலைநகருக்குச் செல்வதால், அவர்கள் கண்ணீர்ப்புகை குண்டும் நீர்பீய்ச்சியும் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் போராட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தலைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ள அரியானா மாநில பாஜக அரசு மற்றும் மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுதில்லி காவல்துறையின் விவசாயிகள் விரோதப் போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மோடி அரசே,  மக்கள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு” என்றும்  சிதம்பரம் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“விவசாயிகள் மீதான தாக்குதல் பாஜகவின் வன்முறை வெறியாட்டம்” – தொல்.திருமாவளவன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்