Aran Sei

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘தில்லி சலோ’ (தில்லி போவோம்) எனும் பேரணிக்கு விவசாயச் சங்கங்கள் அழைப்புவிடுத்தன.

கொரோனா தொற்று காலகட்டத்தில் பொதுக்கூட்டங்களில் ஈடுபடுவது ஆபத்து என்பதைச் சுட்டிக்காட்டி தில்லிக் காவல்துறை, இந்தப் போராட்டத்திற்கு அனுமதியை மறுத்தது. விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள் , ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினர் நேற்று முன் தினம் (நவம்பர் 27) காலை தில்லி எல்லையை அடைந்தனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி, அவர்கள் நகரத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர்.

இன்று ’ஒரே நாடு, ஒரே விவசாயிகள் எதிர்ப்பு’-நாளை ‘தில்லி சலோ’

 

தற்போது, வடமேற்கு தில்லி எல்லையில் உள்ள நிரங்கரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த தில்லி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. போராட மைதானம் தேவையில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தில்லி, ஹரியானா எல்லையில் உள்ள சிங்கு பகுதியில், போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

“நாங்கள் புராரியில் உள்ள நிரங்கரி மைதானத்திற்கு செல்ல மாட்டோம். காரணம்,  நாங்கள் அங்கு சென்றால், அங்கேயே பல நாட்கள் உட்கார்ந்திருப்போம். எதுவும் நடக்காது. ஆனால் இங்கே தில்லி எல்லை அடைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.” என்று 24 வயதான ஹர்விந்தர் சிங் தி இந்துவிடம் கூறியுள்ளார்.

விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்

 

“நாங்கள் ஆறு மாதங்கள் இங்கு தங்குவதற்கு முழு ஏற்பாட்டுடன் உள்ளோம். எங்கள் குரலை அரசு கேட்கும் வரை, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, எங்கள் போராட்டம் அத்தனை காலம் வரை நீடிக்கும்.” என்று கர்னாலைச் சேர்ந்த 25 வயது விவசாயி தில்பாக் சிங் கூறியுள்ளார் என்று தி இந்து தெரிவித்துள்ளது. மேலும், பல நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் ட்ராக்டர்களின் நிரப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சில டிரக்குகளின் உள்ளே மாவு, பருப்பு வகைகள் மற்றும் உருளைக்கிழங்கு சாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரிய பாத்திரங்களுடன் வெளியே ஒரு அடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

விவசாயிகள் படுப்பதற்கான மெத்தைகள் டிரக்கின் உள்ளேயும் வெளியேயும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மொபைல் போன்களுக்கு சார்ஜிங் செய்வதற்கு கூடுதல் பேட்டரிகளும் போதிய இருப்பு உள்ளன.

குடி தண்ணீர் டேங்கர்கள் முறையான இடைவெளியில் நிறுவப்பட்டுள்ளன. டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட, பந்தியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அங்கே உள்ள ஏற்பாடுகளை தி இந்து பட்டியலிட்டுள்ளது.

விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு

“கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்ட வருகிறோம். அப்போது எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையா? இப்போது மட்டும்அது நடக்கிறதா? ” என்று பஞ்சாபின் மோகாவைச் சேர்ந்த பாரதிய விவசாய கிரந்திகரி சங்கத்தை சேர்ந்த 50 வயதான ரகுவீர் சிங் தி இந்துவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படாவிட்டால், நாங்கள் எப்படியும் சாகத்தான் போகிறோம். காரணம், நாங்கள் கார்பரேட்டுகளின் கைகளால் சுரண்டப்படுகிறோம்.” என்று விமர்சித்துள்ளார்.

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்