Aran Sei

‘நாடாளுமன்ற முற்றுகை; 40 லட்சம் டிராக்டர்கள்; இந்தியா கேட் பூங்காவில் உழவு’ : தீவிரமாக களமிறங்கும் விவசாயிகள்

மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், போராடும் விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார்.

இந்த டெல்லி அணிவகுப்புக்கான (டெல்லி மார்ச்) அழைப்பு எந்த நேரத்திலும் விடுக்கப்படலாம் என்பதால் விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 23),  ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் யுனைடெட் கிசான் மோர்ச்சா ஒருங்கிணைத்திருந்த விவசாயிகள் மகாபஞ்சாயத்தில்  ராகேஷ் திகாயத் பங்கேற்று உரையாற்றியுள்ளார் .

விவசாயிகள் போராட்டம் – விவசாய சங்க தலைவர் மீது துப்பாக்கிச் சூடு, கொலை முயற்சி

அதில், “இந்த முறை நாடாளுமன்றத்தை முற்றுகையிட போகிறோம். நான்கு லட்சம் டிராக்டர்களுக்கு பதிலாக, இந்த முறை நாற்பது லட்சம் டிராக்டர்களுடன் டெல்லியை நோக்கி அணிவகுத்து செல்லவிருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்தியா கேட் அருகே உள்ள பூங்காக்களை கைப்பற்றி, அங்கே உழுது பயிரிடுவார்கள். நாடாளுமன்ற முற்றுகைக்கான தேதியை ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் தீர்மானிப்பார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது வெடித்த வன்முறை, நம் நாட்டின் விவசாயிகளை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட ஒரு சதித்திட்டம் என்று குற்றஞ்சாட்டியுள்ள ராகேஷ் டிக்கைட், “நம் நாட்டின் விவசாயிகள் மூவர்ண கொடியை விரும்புகிறார்கள். ஆனால், இந்த நாட்டின் தலைவர்கள்தான் விரும்பவில்லை.” என்று விமர்சித்துள்ளார்.

” சட்டங்களை மட்டுமல்ல, அரசாங்கத்தையே மாற்ற முடியும் ” – மத்திய அமைச்சருக்கு விவசாயத் தலைவர் திகாயத் பதிலடி

மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்து, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யாவிட்டால், விவசாயிகளும் பெரு நிறுவனங்களின் கிடங்குகளை  (கோடவுன்களை) இடித்து தள்ளுவார்கள் என்று விவசாயிகள் வெளிப்படையாக மத்திய அரசிற்கு சவால் விடுகிறோம் என்றும் விரைவில், ஐக்கிய முன்னணி இதற்கான தேதியை அறிவிக்கும் என்றும் ராகேஷ் திகாயத் குறிப்பிட்டுள்ளார்.

Source : PTI

‘நாடாளுமன்ற முற்றுகை; 40 லட்சம் டிராக்டர்கள்; இந்தியா கேட் பூங்காவில் உழவு’ : தீவிரமாக களமிறங்கும் விவசாயிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்