விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ (டெல்லி போவோம்) எனும் பேரணிக்கு விவசாயச் சங்கங்கள் அழைப்புவிடுத்தன.
கொரோனா தொற்று காலகட்டத்தில் பொதுக்கூட்டங்களில் ஈடுபடுவது ஆபத்து என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லிக் காவல்துறை, இந்தப் போராட்டத்திற்கு அனுமதியை மறுத்தது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள் , ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இன்று ’ஒரே நாடு, ஒரே விவசாயிகள் எதிர்ப்பு’-நாளை ‘தில்லி சலோ’
இந்தக் குழுவினர் நேற்று (நவம்பர் 27) காலை டெல்லி எல்லையை அடைந்தனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி, அவர்கள் நகரத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர்.
தற்போது, வடமேற்கு தில்லியில் நிரங்கரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்
இதனைத் தொடர்ந்து, நேற்று (நவம்பர் 27) இரவு நிரங்கரி மைதானத்தில் டெல்லிக் காவல்துறை தேவையான ஏற்பாடுகளைச் செய்தது என்றும் சில விவசாயச் சங்கத் தலைவர்களும் மூத்த காவல்துறை அதிகாரிகளும் அந்த இடத்தை ஆய்வு செய்தனர் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், நிரங்கரி மைதானம் முழுவதும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை
”அரசு, இதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும். எங்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும். நாங்கள் இன்று (நவம்பர் 27) இரவு மீரட் டோல் பிளாசாவில் தங்கியிருக்கிறோம். நாளை (நவம்பர் 28) காலை டெல்லிக்குப் புறப்படுவோம்.” என்று பாரதிய விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த ராகேஷ் டிக்கைட் ஏஎன்ஐ யிடம் கூறியுள்ளார்.
”விவசாயிகளுடன் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேச அரசு எப்போதும் தயாராக உள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு விவசாயச் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். கொரோனா தொற்று மற்றும் குளிர்காலத்தைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு
இந்நிலையில், போராட்டத்தின் காரணமாகப் பல இடங்களில் நிறுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள், மீண்டும் மாலை 6 மணி அளவில் தொடங்கப்பட்டுள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.