எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் ஆகியோருடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்களான சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர், ஜோதி ஜக்தாப் ஆகிய மூவருக்கும் பிணை வழங்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியினருடன் இந்த மூவரும் சேர்ந்து இந்தியாவின் அமைதியின்மையைக் குலைக்கவும், நரேந்திர மோடி அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் சதி செய்துள்ளதாகவும், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலை செய்ததை போல நரேந்திர மோடியையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருப்பதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மூவரின் செயல்பாட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் இந்தியாவில் உள்ள மக்களின் மரணம் அல்லது காயங்களை ஏற்படுத்தக்கூடும்”என்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தீவிரமாக வேலை செய்துள்ளனர் என்பதைப் பார்க்க முடிகிறது என்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவுடன் இந்த மாநாடு நடந்ததாக புனே காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர், ஜோதி ஜக்தாப் ஆகிய மூவரும் 2020 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு, இன்றுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணையானது, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
2017 டிசம்பர் 31 அன்று புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசப்பட்ட கருத்துக்களால், பீமா கோரேகான் போர் நினைவிடம் அருகே அடுத்த நாள் வன்முறையை நடந்தேறியது என்று காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.