கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை விடுதலை செய்யக் கோரி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி 14), பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான பருவநிலை செயல்பாட்டாளர் தீஷா ரவியை, டெல்லி காவல்துறை கைது செய்தது.
ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்” (தகவல் தொகுப்பு) ஒன்றை பகிர்ந்திருந்தார்.
விவசாயிகள் போராட்டம் – ” கைது செய்யப்பட்ட 21 வயது மாணவி தீஷா ரவிக்கு போலீஸ் காவல் சட்ட விரோதமானது “
அந்த தொகுப்பை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதாக டெல்லி காவல்துறை, திஷா ரவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.
நேற்று (பிப்ரவரி 15), கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, ‘திஷா ரவியை விடுதலை செய்’ என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
1975-ம் ஆண்டு, இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை காலக்கட்டத்துடன், சமகால நிலைமையை ஒப்பிட்டு பேசிய ராமச்சந்திர குஹா, “சிந்தனைகளும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களுக்காக துன்புறுத்தப்படுவது வருத்தமளிக்கிறது. நான் அவசரநிலை காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்கிறேன். ஒரு மாணவனாகவும் ஒரு வரலாற்றாசிரியராகவும். நாம் இன்று அக்காலக்கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருப்பது, மிகவும் கவலையளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக ராஜ்ய ரைதா சங்கத்தின் விவசாயிகள் சங்க தலைவர் படகல்புரா நாகேந்திரர், திஷா ரவியின் கைதுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,“ இது போராடும் விவசாயிகள் மீதான ஒடுக்குமுறை. நாங்கள் விவசாயிகளுக்காக போராடும் திஷா ரவியுடன் நிற்கிறோம். எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் பேசியபோது, நாங்கள் கூட தேச விரோதிகளாக சித்தரிக்கப்பட்டோம்.”என்று அவர் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸை சேர்ந்த கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தனது ட்வீட்டில், “திஷா ரவியின் கைதானது, நரேந்திர மோடியின் ஆட்சியிலால், இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்ட விரிசல்களை அம்பலப்படுத்தியுள்ளது. விவசாயிகளை ஆதரிப்பது எப்படி தேசத்துரோக குற்றமாகும்? இது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை.” என்று விமர்சித்துள்ளார்.
‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ – காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு
இவற்றுக்கிடையில், திஷா ரவியின் நண்பர்கள் #fingeronyourlips என்ற இணையவழி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தங்கள் உதடுகளில் விரல்கள் வைத்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
#FingerOnYourLips is a peaceful digital protest condemning the arrest of Disha, suppression of dissent and those like Nikita, Shantanu and many, many others who stand for environmental and social justice. The youth cannot be intimidated into silence. 1/ pic.twitter.com/x8JqUjSU3o
— Muse Foundation Assam (@MuseAssam) February 15, 2021
அதில், திஷா ரவி கைது செய்யப்பட்டதையும், நிகிதா ஜேக்கப் சாந்தனு ஆகிய இரு செயற்பாட்டாளர்களை துன்புறுத்தப்பட்டதையும் கண்டித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.