சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் எண்ணங்களையும் அமைச்சகம் பிரநிதித்துவப்படுத்துகிறது, எந்தச் சித்தாந்தத்தையும் மவுனமாக்குவதில் நம்பிக்கை கொள்ளவில்லை என மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துத்துவ சித்தாந்தவாதியான எம்.எஸ்.கோல்வால்கருக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தி பதிவிட்டது சர்ச்சையானதற்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சகம் இவ்வாறு கூறியிருப்பதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.கோல்வால்கரின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கலாச்சாரத்துறை அமைச்சகம், அந்தப் பதிவில் “சிறந்த சிந்தனையாளர், அறிஞர், மதிக்கத் தக்க தலைவர் எம்.எஸ்.கோல்வால்கரை அவரது பிறந்தநாளில் நினைவு கூறுகிறோம். அவரது எண்ணங்கள் உத்வேகத்தின் ஆதாரமாக இருப்பதோடு, தலைமுறைகளுக்குத் தொடர்ந்து வழிகாட்டும் எனத் தெரிவித்திருந்தது.
அமைச்சகத்தின் இந்தப் பதிவைக் கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலின் ஊடக ஆலோசகர், “இந்தியா உலகில் மிகவும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட நாடு மற்றும் பன்முக கலாச்சாரத்தின் தொகுப்பு. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் எண்ணங்களையும் கலாச்சார அமைச்சகம் பிரதிபலிக்கிறது. தனித்துவமான சமூக- கலாச்சார பண்புகள், பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளின் தொகுப்புகள் எல்லா நிலையிலும் மதிக்கப்பட வேண்டும்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திஷா ரவியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த டெல்லி நீதிமன்றம்
அவர் பதிவிட்டுள்ள இரண்டாவது ட்விட்டில், “”தனித்துவமான சமூக-கலாச்சார பண்புகள், பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளின் தொகுப்புகள் எல்லா விலையிலும் மதிக்கப்பட வேண்டும், இது பல காலங்களிலிருந்து இந்தியா போன்ற ஜனநாயகத்தின் இன்றியமையாத கூறுகளில் ஒன்றாகும்.” என தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.