Aran Sei

கர்நாடகா: நீதிமன்ற உத்தரவு மீறி இயேசு சிலை இடிப்பு – பாதிரியார் குற்றச்சாட்டு

ர்நாடகாவின் கோலார் மாவட்ட நிர்வாகத்தால் 20 அடி உயரமுள்ள இயேசு சிலை பிப்பிரவரி 15 அன்று இடிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறியும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் கூட அனுப்பாமல் இயேசு சிலை இடிக்கப்பட்டதாகப் பெங்களூரில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பொறுப்பாளரான பாதிரியார் பீட்டர் மச்சாடோ குற்றம் சாட்டியுள்ளார்.

இயேசு சிலை உள்ள கோகுண்டே கிராமத்தில் சுமார் 600 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 4 குடும்பங்கள், தவிர மற்ற அனைவரும் ரோமன்-கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

‘கோட்சே என் வழிகாட்டி‘ – குஜராத் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியால் சர்ச்சை

இயேசு சிலை இருந்த நிலம் தேவாலயத்திற்குச் சொந்தமானது, அதற்குத் தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருந்த போதிலும் சட்டவிரோதமாகச் சிலையை இடித்துச் சென்றதாக மச்சாடோ குற்றம் சாட்டினார்.

“கர்நாடகாவில் அரசு நிலங்களில் கட்டப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத மதக் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்று கர்நாடக அரசு சமீபத்தில் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. ஆனால் அது சிறுபான்மை மதங்களுக்குப் பொருந்தாதா? கிறிஸ்தவ சமூகத்தின் மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சமான அணுகுமுறை?” என்றும், இயேசுவின் சிலையைத் தவிர, “14 சிலுவை தொடர்களும்” இந்த கோகுண்டே கிராமத்தில் இடிக்கப்பட்டுள்ளன என்று பாதிரியார் பீட்டர் மச்சாடோ குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகா: நீதிமன்ற உத்தரவு மீறி இயேசு சிலை இடிப்பு – பாதிரியார் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்