Aran Sei

மாநிலங்களில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள் : டெல்லி எல்லையில் போராட்டம் வலுவிழக்கிறதா ?

credits : the hindu

டெல்லி – ஹரியானா எல்லையில் இருக்கும் பஞ்சாப் மாநில விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், மகாபஞ்சாயத்து கூட்டங்களை ரத்து செய்து விட்டு, போராட்ட களமான சிங்கு, திக்ரிக்கு வருமாறு விவசாயிகள் சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லைகளில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கு எல்லையில் 32 பஞ்சாப் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய, பாரதிய கிசான் சங்கத்தின் பஞ்சாப் தலைவர் புட்டா சிங் புர்ஜ்கில், “பஞ்சாபில் மிகப்பெரிய கூட்டங்களை நடத்துவதை விட, டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். பஞ்சாபில், மகாபஞ்சாயத்து கூட்டங்களை நடத்தி வருபவர்கள் கூட்டங்களை ரத்து செய்யுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாநிலங்களில் பரவும் போராடும் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள்

அனைத்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் பஞ்சாப் தலைவர், மேஜர் சிங் புன்னாவல், ”டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் வலுவிழந்து வருகிறது எனும் கூற்றை ஒடுக்க பஞ்சாப் விவசாயிகள் அனைவரும் ஒன்றாக டெல்லி நோக்கி அணிதிரள வேண்டும்” என கூறியுள்ளார்.

வட இந்திய மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்ட்ராவில் மகாபஞ்சாயத்து – விரிவடையும் விவசாயிகள் போராட்டம்

மகாபஞ்சாயத்து கூட்டங்கள், டெல்லி எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் பின்வாங்கப்பட்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவதாக கூறியுள்ள கீர்த்தி கிசான் சங்கத்தின் தலைவர் ராஜிந்தர் சிங், சமீபமாக விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ள மாநிலங்களுக்கு தான் அந்த மாநிலங்களில் கூட்டங்கள் தேவை எனவும் போராட்டம் தொடங்கிய மாநிலமான பஞ்சாபில் கூட்டங்கள் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த பிரியங்கா காந்தி – 144 தடை உத்தரவு பிறப்பித்த உத்திர பிரதேச அரசு

மேலும், நாளைய தினம் , மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கோரும் போராடட்த்தின் ஒரு பகுதியாக ரயில் மறியல் போராட்டத்தையும் விவசாயிகள் சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

” மத ரீதியாகவும், மாநில ரீதியாகவும் மக்களை பிரிக்க பாஜக அரசு சதி ” : ராகேஷ் திகாயத்

விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்த கிசான் மோர்ச்சா ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா என பல மாநிலங்களில் மகாபஞ்சாயத்து கூட்டங்களை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.

போராடுவதற்கு தடை விதித்த பாஜக அரசு: ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள விவசாயிகள்

பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத், டெல்லிக்கு செல்வதை விட விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திலே அணிதிரட்டுவது நல்லது என்று கூறினாலும், மற்ற தலைவர்கள், அழைப்பு வரும்போது டெல்லிக்கு விவசாயிகளை அழைத்து வரவே விவசாயிகளை தயார் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

மாநிலங்களில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள்  : டெல்லி எல்லையில் போராட்டம் வலுவிழக்கிறதா ?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்