Aran Sei

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

காராஷ்டிரா  மாநிலத்தில், மே 1 ஆம் தேதிவரை மாநிலம் தழுவிய ஊடரங்கை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்திருக்கும் நிலையில், அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு தினம் முன்பிருந்தே புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய் (பிப்ரவரி 13) இரவு, உத்தவ் தாக்கரே ஊடரங்கை அறிவித்தவுடன், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் முனையம் (சிஎஸ்எம்டி) புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பியிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறக்கப்படும் என எதிர்பாக்கப்பட்டதால் பலரால் தங்கள் சொந்த ஊருக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை பெற முடிந்ததாகவும், மேலும் பலர் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை பெற ரயில் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

ஜப்பான் அணுக்கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு – சர்வதேச நீதிமன்றத்தை நாடிய தென் கொரியா

வடஇந்தியாவிற்கு செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை மத்திய மற்றும் தெற்கு ரயில்வே அதிகரித்துள்ள போதும், செவ்வாய் இரவு முன்பதிவு செய்தோருக்கான காத்திருப்போர் பட்டியலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஊரடங்கில் நடைபெற்றது போன்று மீண்டும் நடந்துவிடும் என்ற அச்சத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுடன் நீண்டதூர ரயில்களுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த 36 வயதான பிரதீப் குமார் யாதவ், “முன்பதிவு டிக்கெட் கிடைத்திருப்பது என் அதிர்ஷடம். நான் கோரேகானில் ஒரு மரச்சாமான்கள் கடையில் வேலை செய்து வந்தேன். கடை மூடப்பட்டுவிட்டது, உரிமையாளர் எங்களை விடுப்பில் செல்லுமாறு கேட்டுள்ளார். நான் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மும்பைக்கு வந்திருந்தேன். கடந்த முடக்கத்தின்போது நான் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நான் உயிர் வாழ என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நடப்பது எல்லாம் வழியில் நல்லதற்கே, ஏனெனில் இது எங்கள் சொந்த நன்மைக்காகத் தான். இந்தத் தொற்றுநோயால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஹரித்வார் கும்பமேளா: ‘இது தப்லிக் ஜமாத் அல்ல; கங்கை மாதாவின் ஆசிர்வாதத்தால் நமக்கு கொரோனா வராது’ – பாஜக முதல்வர்

உத்திரபிரதேச மாநிலம்  கோரக்பூரை சேர்ந்த 23 வயதான மோனு குப்தா, ”நான் வைர மெருகூட்டல் பிரிவில் வேலை செய்து வந்தேன்.  என் நிறுவனம் ஓரிரு வாரம் மூடப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் என் கடந்த ஆண்டு அனுபவத்திற்குப் பிறகு நான் அவர்களை நம்பவில்லை. ஊரடங்கு உத்தரவு ஓரிரு மாதங்கள் நீட்டிக்கப்படலாமென நான் நினைக்கிறேன். எனவே, நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறேன், ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் திரும்பி வருவேன்.” என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் -யிடம் தெரிவித்துள்ளார்.

 

மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – சுடுகாடுகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்சுகள்

வட மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்திற்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாயாகவும், ரயில் பயணம் 1, 500 ரூபாயாகவும் இருப்பதால், பலரும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மும்பை பேருந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹர்ஷ் கோடக், ”கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணம் செய்கின்றனர். கடந்த ஆண்டு உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு 10 நாட்களில், 1000 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டிக்கிறது” என தெரிவித்தாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்