Aran Sei

“போராடும் விவசாயிகளுடன் கைகோருங்கள்” – கம்யூனிஸ்ட் கட்சிகள் தொண்டர்களுக்கு அழைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முனவைத்து தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி தொடங்கிய விவாசயிகள் போராட்டம் இன்று 5வது நாளை அடைந்துள்ளது. டெல்லி செல்வோம் (டெல்லி சலோ) என்ற முழக்கத்தை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட லட்சக்கணக்கான விவசாயிகள் தற்போது டெல்லியின் புறநகரில் முகாமிட்டு போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்), அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசியலிச கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தங்கள் கட்சிகளின் அனைத்து அமைப்புகளும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதவளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

“இந்திய விவசாயத்தைப் பாதுகாக்கவும், நமது உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், விவாசயிகளின் வருமானத்தை உறுதி செய்யவும், செயற்கையான உணவு தட்டுப்பாட்டைத் தடுக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை தடுக்கவும், போராடும் விவாசயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமரின் மன்கி பாத் உரை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இதற்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, பொது முடக்கம் ஆகியவற்றை மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கை என்று பிரமர் கூறியதாகவும், ஆனால் அது எதிர்விளைபுகளையே ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். “விவாசயிகளையும், விவாசயத்தையும் அழித்துவிடாதீர்கள்” என்றும் சீதாரம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

“போராடும் விவசாயிகளுடன் கைகோருங்கள்” – கம்யூனிஸ்ட் கட்சிகள் தொண்டர்களுக்கு அழைப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்