கடந்த மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் முன்பு பாஜக இளைஞர் பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடு தான் இதற்குக் காரணம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பொறுப்பை உணர்ந்து சரி செய்யுமாறு டெல்லி காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்ததற்கு எதிராக பாஜகவின் இளைஞர் அணியினர் மார்ச் 30 தேதி போராட்டம் நடத்தினர். அப்போது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தகர்த்து தாக்குதல் நடத்தினர்.
திருச்சி: உத்தமர் கோயிலில் அன்னதானம் மறுக்கப்படுவதாக நரிக்குறவர் மக்கள் குற்றச்சாட்டு
தாக்குதல் நடத்தியது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் சவுரப் பரத்வாஜ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி விபின் சங்கி, “அனுமதி மறுக்கப்பட்ட பாஜகவின் இளைஞர் பிரிவு போராட்டத்தை முன்னெடுத்த நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறையின் தோல்வியை சுட்டிக்காட்டியுள்ளார்.
“பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா சார்பில் கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டதை அடுத்து, முதலமைச்சர் இல்லம் மற்றும் குடியிருப்புக்கு செல்லும் சாலைக்கு வெளியே போடப்பட்டிருந்த பாதுகாப்பு போதுமானதாக இல்லை” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சில குற்றவாளிகள் தடுப்புகளை மீறி குடியிருப்பு வாயிலை அடைந்ததாக குறிப்பிட்ட நீதிமன்றம், “எங்கள் பார்வையில், மேற்குறிப்பிட்ட குறைபாடு ஒரு தீவிரமான குறைபாடு, டெல்லி காவல்துறை ஆணையர், இதனை சரிபார்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.
Source: The Wire
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கர்ஜித்த தமிழ்நாடு சட்டமன்றம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.