“இஸ்லாமியர்களின் வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அகில பாரத இந்து மகாசபாவின் தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் இஸ்லாமியர்களின் வெள்ளிக்கிழமை தொழுகை நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது பூஜா சகுன் பாண்டே தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தை மதவெறியர்கள் அவமதிக்க இந்திய அரசு அனுமதிக்க கூடாது: தாலிபான்கள் கோரிக்கை
இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக காவல்துறையினர் பூஜா சகுன் பாண்டே மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட நீதிபதி குன்வர் பகதூர் சிங் அவர்கள் பூஜா சகுன் பாண்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவரின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Source : newindianexpress
மிரட்டிய அரபு நாடுகள் உதறலில் பாஜக Dr Sharmila Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.