ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 தேதி முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாத் தெரிவித்துள்ளார்.
மேற்கு உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பேசிய திகாத், ”அக்னிபத் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசுடன் இன்னும் சண்டையை தொடங்கவில்லை” என்று கூறியுள்ளார்.
”அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு மேலாக பிரச்சாரம் நடைபெறும்” என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில் விவசாயிகளை மிரட்ட போராட்டங்களுக்கு பிறகு, பழைய வழக்குகளை காவல்துறையினர் கையில் எடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
‘விவசாய சங்கத்தை உடைப்பதற்காக பாஜக என்னைக் கொல்ல முயற்சிக்கிறது’ – ராகேஷ் தியாகத் குற்றச்சாட்டு
லக்னோ மற்றும் டெல்லியில் உள்ளவர்கள் இதை கவனமாக கேட்க வேண்டும் என்று கூறிய அவர், “நீங்கள் அரசியல் கட்சிகளை உடைக்க முடியும், விவசாயக் குழுக்களின் தலைவர்களை நீங்கள் பிரிக்கலாம், ஆனால் விவசாயிகளை உடைக்க முடியாது. விவசாயிகள் உங்களுக்கு (இரண்டு அரசாங்கங்களுக்கும்) எதிராக போராடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நிலம் கையகப்படுத்துதல், மின் கட்டணம் மற்றும் நிலுவையில் உள்ள கரும்பு நிலுவைத் தொகைகள் உள்ளிட்டவை பிரச்னைகள் தொடர்பாகவும் திகாத் எடுத்துரைத்துள்ளார்.
Source: The New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.