Aran Sei

புதிய வேளாண் சட்டங்கள் கள்ளச் சந்தைக்கு வழிவகுத்துள்ளது – மம்தா பானர்ஜி

Image Credits: India Today

த்திய அரசால் இயற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்கள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை கள்ளச்சந்தையில் விற்க வழிவகை செய்துள்ளது, இதனால் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

வேளாண் சட்ட எதிர்ப்பில் உறுதி – பஞ்சாபில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்  எழுதியுள்ள  மம்தா பானர்ஜி ” உணவு பொருட்கள் கள்ள சந்தையில் விற்பனையாவதை தடுக்க வேண்டும் அல்லது இந்த பிரச்சினையை சமாளிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் ” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“மத்திய அரசு அழிவுகரமான வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது, இது உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை கள்ள சந்தைகளில் விற்பனை செய்ய வழிவகுக்கிறது,” என்று மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“முன்னதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ஆனால், மத்திய அரசின் சட்டங்கள் மாநிலங்களின் அதிகாரத்தை பறித்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு விவசாயிகளிடமிருந்து அனைத்தையும் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, உருளைக்கிழங்கின் விலை மோசமான முறையில் அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர், அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற உணவு பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு மாநில அரசு மீது குற்றம் சாட்டக்கூடாது என்றும் மேற்கு வங்க முதல்வர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், மத்திய அரசு, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை இயற்றியது. அதன்படி, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

“மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், தற்போது கள்ள சந்தைக்காரர்கள் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்” என்று அவர்தெரிவித்துள்ளார்.

“மேற்கு வங்க அரசு தனது ‘சுஃபால் பங்களா’ (மலிவு விலை திட்டம்) விற்பனை நிலையங்களில் இப்போதும் ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ.25 க்கு விற்பனை செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்கள் கள்ளச் சந்தைக்கு வழிவகுத்துள்ளது – மம்தா பானர்ஜி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்