பாஜக அரசாங்கம் திமிர்பிடித்தது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த ஏஜென்சிகள் மீது திணிக்கப்படும் தேவையற்ற அழுத்தத்தை அம்பலப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருப்பதால் காவல்துறையின் ஒடுக்குமுறை எங்களை தடுக்காது என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
அமலாக்க இயக்குநரகத்தால் ராகுல் காந்தி விசாரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் அவர்களை கைது செய்தது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், பெண் நிர்வாகிகள் மீது தவறாக நடந்து கொண்டதாகவும் சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.
“நாங்கள் எங்கள் கட்சி அலுவலகத்திற்குள் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது சட்டவிரோதமாக எங்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்கள் எங்களை அடுத்து என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை? என்று சச்சின் பைலட் கூறியுள்ளார்.
அத்துமீறி எங்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து எங்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Source : newindianexpress
கேள்வி கேட்டா Bulldozer வச்சு இடிப்பீங்களா? Dr Sharmila
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.