Aran Sei

பீஹார் தேர்தல் : வேட்பாளர்களில் 328 பேர் கிரிமினல் குற்றவாளிகள்

பீஹார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1066  வேட்பாளர்களில் 328 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அவர்களது வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரங்களின் பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த 328 நபர்களில் 28 நபர்கள் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்கள் எனவும் மூன்று நபர்கள் மீது கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பீஹாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

கிரிமினல் வழக்குகள் அதிகம் கொண்ட வேட்பாளர் பட்டியலில் நித்திஷ் குமாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக பீஹாரின் 71 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது பீகார் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்). மேலும் அனைத்து முக்கியமான அரசியல் கட்சிகளும் கறைபடிந்த வேட்பாளர்களையே களமிறக்கியுள்ளதாகவும், இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் பாரதிய ஜனதா கட்சியும் கடுமையான போட்டியில் உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இறுதியாக ஆய்வில் வேட்பு மனு தாக்கல் செய்த 1066 பேரில் 328 பேர் மீது  ( 31% ) கிரிமினல் வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் அனைத்து முக்கியமான அரசியல் கட்சிகளும் கிரிமினல் வழக்குகள் நிறைந்த ஏராளமான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் – 73 % வேட்பாளர்கள் – 41 வேட்பாளர்களில் 30 பேர்

பாரதிய ஜனதா கட்சி   – 72 %  வேட்பாளர்கள் – 29 வேட்பாளர்களில் 29 பேர்

லோக் ஜனசக்தி கட்சி   – 59 %  வேட்பாளர்கள் – 41 வேட்பாளர்களில் 24 பேர்

காங்கிரஸ்          – 57 %  வேட்பாளர்கள் – 21 வேட்பாளர்களில் 12 பேர்

ஜனதா தளம் (யுனைடட்) – 31 % வேட்பாளர் – 26 வேட்பாளர்களில் 8 பேர் எனக் குற்றப் பிண்ணனிகளைக் கொண்டுள்ள நபர்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறன இந்தக் கட்சிகள்.

மேலும் குற்றச்சாட்டப்பட்டவர்களின் வேட்பு மனுவில் கொடுத்துள்ள வாக்குமூலங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் 244 வேட்பாளர்கள் அல்லது 23 % பேர் மிகக் கடுமையான வழக்குகளைச் சந்தித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கடுமையான குற்ற வழக்குகள் சந்தித்தவர்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச தண்டனை ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை; மேலும் இந்த வழக்குகளுக்கு ஜாமீன் கிடையாது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், குறிப்பாக ஹத்ராஸ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தலித் பெண்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பல கட்சிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்து வழக்குகளைச் சந்தித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றன.

மேலும் இந்த ஆய்வில் 29 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தங்களது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்து இருந்ததாகவும் அவர்களில் மூன்று பேர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 மற்றும் 376 ன் கீழ் கற்பழிப்பு தொடர்பான வழக்குகளைச் சந்தித்துள்ளனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தவிர, 21 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராகக் கொலை தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், 62 பேர் கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரமாணப் பத்திரங்களில் தெரிவித்துள்ளனர்.

தற்செயலாக, முதல் கட்டத்தில் வாக்களிக்கப் போகும் 71 தொகுதிகளில் 61 (86%) பேர் “ரெட் அலர்ட் தொகுதிகள்” அல்லது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளைப் பெற்றுள்ளவர்கள்.

கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது என்பதற்கான உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை.

உச்சநீதிமன்றம் 2020 பிப்ரவரி 13 அன்று, குற்றப் பின்னணிகளைக்கொண்ட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களைத் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. மேலும் குற்றப் பின்னணிகள் இல்லாத நபர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்வதில் என்ன சிக்கல் என்றும் கேள்வியெழுப்பி இருந்தது. ஆனால், இதைச் சிறிதும் கண்டு கொள்ளாத அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பழைய பாணியையே பின்பற்றி இருக்கிறது ( 31% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன).

மேலும் இந்த ஆய்வில் பீஹார் போன்ற ஒரு ஏழை மாநிலத்தில் கூட பல வேட்பாளர்கள் பணக்காரப் பின்னணியில் இருந்து வருவது எப்படி என்பதை எடுத்துக்காட்டுகிறது. “1,064 வேட்பாளர்களில், 375 (35%) பேர் கோடீஸ்வரர்கள் (நிகர மதிப்பு ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வைத்துள்ளவர்கள்)” என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் சொத்துக்களை ஆய்வு செய்வதில், அவர்களுடைய மொத்த  சொத்துக்களில் 93 அல்லது 9% பேர் ரூ.5 கோடிகள் அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்துள்ளதாகவும், 123 (12%) பேர் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை சொத்துக்களை வைத்து இருந்ததாகவும்; 301(28%) பேர் ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை சொத்துக்களை வைத்து இருப்பதாகவும், 315 (30%) பேர் ரூ.10 லட்சம் முதல் 50 லட்சம் வரை சொத்துக்களைக் கொண்டிருந்ததாகவும்; 232 (22%) பேர் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டிருந்ததாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒரு கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பவர்கள் கட்சி வாரியாக :

ராஷ்ட்ரிய ஜனதா தளம் – 95 % வேட்பாளர்கள் – 41 வேட்பாளர்களில் 39 பேர்

ஜனதா தளம் (யுனைடட்) – 89 %  வேட்பாளர்கள் – 35 வேட்பாளர்களில் 31 பேர்

பாரதிய ஜனதா கட்சி   – 83 % வேட்பாளர்கள் – 29 வேட்பாளர்களில் 24 பேர்

லோக் ஜனசக்தி கட்சி   – 73 %  வேட்பாளர்கள் – 41 வேட்பாளர்களில் 30 பேர்

காங்கிரஸ்  – 67 %  வேட்பாளர்கள் – 26 வேட்பாளர்களில் 12 பேர்

பகுஜன் சமாஜ்   –  19 %  வேட்பாளர்கள் – 26 வேட்பாளர்களில் 5 பேர்

கோடிகளில் சொத்துக்களை வைத்துள்ளனர்.

பெரும்பாலான வேட்பாளர்களின் சொத்து மதிப்பையும் குற்ற வழக்குகள் பற்றி ஆய்வு  செய்ய நிறைய இருக்கிறது. ஆனால், அவர்கள் கல்வித் தகுதிகள் குறித்து எழுதவோ ஆய்வு செய்யவோ ஒன்றுமில்லை. 5 வேட்பாளர்கள் கல்வியறிவு பெறாதவர்கள் என்று தங்கள் வேட்புமனுவில் கூறியுள்ளனர். 74 பேர் தாங்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்றும் கூறியுள்ளனர்; 455 (43%) பேர் தங்கள் கல்வித் தகுதியை 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருக்கின்றனர்; 522 (49%) மட்டுமே பட்டதாரிகள் அல்லது அதற்கு மேற்படிப்பு படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுகளை மேற்கொண்ட பீகார் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கமான (ஏடிஆர்)

`கடுமையான குற்றங்களில் ஈடுபட்டிருந்த வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்களைக் களமிறக்கும் கட்சிகளுக்கு வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்’என்று கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் “கொலை, கொள்ளை , கற்பழிப்பு, கடத்தல், போன்ற கொடூரமான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வேட்பாளர்களை நிரந்தரமாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்றும் ” தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் “ என்றும் கூறியுள்ளது.

பீஹார் தேர்தல் : வேட்பாளர்களில் 328 பேர் கிரிமினல் குற்றவாளிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்