Aran Sei

”தி டெல்லி ஃபைல்ஸ்” என அடுத்த படத்திற்கு பெயரிட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் – மகாராஷ்டிரா சீக்கிய சங்கம் கண்டனம்

Credit: NDTV

”தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, அவரின் அடுத்த திரைப்படத்திற்கு டெல்லி ஃபைல்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். இதற்கு மகாராஷ்டிரா சீக்கிய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமூகத்தின் அமைதியை சீர்குலைப்பதில் இருந்து திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் விலகி இருக்க வேண்டும் என்று அந்த சங்கம் கூறியுள்ளது.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக ”தி டெல்லி பைல்ஸ்” இருக்கும் என்று ஊகங்கள் பரவி வருகின்றன. ஆனால், கதைகுறித்து இதுவரை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ஒன்றிய அரசின் விளம்பரத்தினால் பண்டிட்களுக்கு ஆபத்து – முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த சின்ஹா தலைமையிலான குழு கருத்து

மகாராஷ்டிரா சீக்கிய சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”தனிப்பட்ட இலாபவெறிக்காக படைப்பு சுதந்திரம் என்ற பெயரில், சீக்கிய கலவரங்கள் போன்ற மனித குலத்தின் துயரமான அத்தியாயங்களை வணிகமயமாக்குவதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ”எனது மனசாட்சி வழிநடத்தும் படத்தை எடுக்க எனக்கு உரிமை உள்ளது. தலைப்பிற்கு அப்பால் படம்குறித்து எதையும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தொடர்பாக பரப்பபடும் தவறான செய்திகள் – உண்மை என்ன?

”இது எந்த அமைப்பு என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு இந்தியன், நான் ஒரு இறையாண்மை கொண்ட சமூகத்தில் வாழ்கிறேன். இது நான் விரும்பும் எந்த வழியிலும் என்னை வெளிப்படுத்த முழு உரிமையையும் அளிக்கிறது. நான் செய்ய வேண்டியதை, என் மனசாட்சி செய்ய சொல்கிறதை நான் செல்வேன். நான் யாருடைய கோரிக்கைகளுக்கோ அல்லது அமைப்பிற்கோ சேவகன் அல்ல”என்று விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

”நான் என்ன செய்கிறேன், ஏன் இதை உருவாக்குகிறேன் என்று கூட அறிவிக்கவில்லை. மக்கள் அனுமானங்களை உருவாக்குகிறார்கள், அதை அவர்கள் தொடர்ந்து செய்ய முடியும். ஆனால், இறுதியில் நான் என்ன மாதிரியான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். அதை திரையிடலாமா? வேண்டாமா? என்பதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை யூடியூப், தூர்தர்ஷனில் வெளியிட வேண்டும் – மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கிய ஆம் ஆத்மி எம்பி

”தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தினால் ஏற்பட்ட சர்ச்சை அளித்துள்ள தைரியத்தால், 1984 சீக்கிய கலவரம் போன்ற மனித குலத்தின் துயரத்தை வணிகமாக மாற்ற முயன்று வருகிறார் என்று சீக்கிய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

”வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா. இங்குள்ள மக்கள் பல்வேறு மதங்களை பின்பற்றினாலும் ஒருவருக்கொருவர் இணைக்கமாக வாழ்ந்து வருகின்றனர். சீக்கிய சமூகம் அதன் வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களை மறக்க முயற்சிக்கிறது” என்று சீக்கிய சங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: NDTV 

இளையராஜா, அம்பேத்கர், யுவன்,  மோடி சர்ச்சை…  விளக்கமளிக்கிறார் பேரா. சுந்தரவள்ளி

”தி டெல்லி ஃபைல்ஸ்” என அடுத்த படத்திற்கு பெயரிட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் – மகாராஷ்டிரா சீக்கிய சங்கம் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்