Aran Sei

காஷ்மீரின் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து விரைவான மற்றும் சுயாதீன விசாரணை – அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா கோரிக்கை

Credit: The Hindu

காஷ்மீர் பொதுமக்கள் படுகொலைகள்குறித்து விரைவான மற்றும் சுயாதீன விசாரணை வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த வாரம், காஷ்மீரின் சிறுபான்மை அமைப்பான இந்து சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 5, 2019 தேதி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அம்னெஸ்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”காஷ்மீர் மக்களின் பாதுகாப்புக்கு இந்திய அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தசாப்தங்களாக, ஜம்மு காஷ்மீர் மக்கள் அரசு மற்றும் அரசு சாரா நபர்களால் இழைக்கப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் நிலவரங்கள் தொடர்பாக செய்தி அறிக்கைகள் – காவல்துறை மிரட்டுவதாக கேரவன் பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீர் மக்களின் மனித உரிமைகள் இந்திய அதிகாரிகளால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நாம் நிறைவேற்றவும், பொதுமக்களுக்கு எதிரான இது போன்ற துஷ்பிரயோகங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் உதவ வேண்டும்” என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரிவு தலைவர் ஆகர் படேல் கூறினார்.

ஊடக அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு மட்டும் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் இந்துக்கள் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

Source: The Hindu

யாரை மிரட்டுகிறார் ஜக்கி கம்பி எண்றதுதான் பாக்கி | Surya Xavier Interview | Aransei | Jaggi Vasudev

காஷ்மீரின் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து விரைவான மற்றும் சுயாதீன விசாரணை – அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்