Aran Sei

டெல்லி கலவரத்தில் அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாக கூறிய வழக்கறிஞர் வீட்டில் சோதனை – நீதித்துறையினர் கண்டனம்

டெல்லி கலவர வழக்கில், காவல்துறையினரால் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் மெஹ்மூத் பிராச்சாவின் வீட்டின் நடத்தப்பட்ட சோதனைக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளும், மூத்த வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மதியம், மெஹ்மூத் பிராச்சா வீட்டில் காவல்துறையினர் சோதனையை தொடங்கினர். இந்த சோதனை மறுநாள் அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.

டெல்லி கலவர வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களை, மூன்று பேருக்கு எதிராக சாட்சி சொல்ல மெஹ்மூத் பிராச்சா கேட்டுக்கொண்டதாக அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, டெல்லி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தருவதாகவும், ஏமாற்றுதல் மற்றும் சதி வேலையில் ஈடுபடுவதாகவும் காவல்துறை மெஹ்மூத் பிராச்சா மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மெஹ்மூத் பிராச்சா, தன்னை பயமுறுத்துவதற்காக காவல்துறை இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பலமுறை கூறியுள்ளார்.

டெல்லி கலவரத்திற்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் உள்ள தொடர்பை வெளிக்கொண்டு வருதற்கு தான் முயற்சி மேற்கொண்ட வருவதால், அமித் ஷாவின் உத்தரவின் பேரிலேயே தன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக மெஹ்மூத் பிராச்சா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.ஜி.கொல்சே பட்டீல், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் சில மூத்த வழக்கறிஞர்கள், டெல்லி காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

“நாம் தெருவில் இறங்கி போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த ஒரு நிகழ்வுக்காக மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திற்கே அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்று பிரசாந்த் பூஷன் கூறினார்.

மெஹ்மூத் பிராச்சா வீட்டில், காவல்துறை நடத்திய சோதனைக்கு, ஏற்கனவே இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: www.thewire.in

டெல்லி கலவரத்தில் அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாக கூறிய வழக்கறிஞர் வீட்டில் சோதனை – நீதித்துறையினர் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்