அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து ஐதராபாத்தில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருபவர் பிரியங்க் கார்கே. இவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலபுரகியை சேர்ந்த பாஜக பிரமுகர் மணிகாந்த் ரத்தோடு என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, பிரியங்க் கார்கே அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போல பேசி இருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகரான திப்பண்ணா என்பவர் கலபுரகி நகரில் உள்ள பிரம்மாபுரா காவல் நிலையத்தில் மணிகாந்த் மீது புகார் அளித்து இருந்தார். மேலும் பிரியங்க் கார்கே அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மணிகாந்தாவை கைது செய்ய கோரி கலபுரகி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டமும் நடத்தி இருந்தனர்.
இந்த பிரச்சினை மிகப்பெரிய அளவில் பேசுபொருளானதால் மணிகாந்த்தை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் மணிகாந்த்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மணிகாந்த் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஒரு விடுதியில் பதுங்கி இருப்பதாக பிரம்மாபுரா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ஹிஜாப் விவகாரம்: மாணவிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங் தளம்
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் சென்ற பிரம்மாபுரா காவல்துறையினர் அங்கு விடுதியில் தங்கி இருந்த மணிகாந்த்தை கைது செய்து கலபுரகிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான மணிகாந்த் மீது வழக்கு எண் 506-ன் கீழ் (உயிருக்கு அச்சுறுத்தல்) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Source : hindustantimes
Pesu Tamizha Pesu Rajavel Nagarajan Ignorant about History I Kamraj Social Justice Class | EWS
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.