Aran Sei

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகாரளித்த விமானப்படை அதிகாரி – புகாரைத் திரும்பப்பெற நிர்வாகம் மிரட்டியதாக குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான  விமானப்படை பெண் புகார் அளித்த அதிகாரியிடம், புகாரைத் திரும்பப் பெறுமாறு மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 20 ஆம் தேதி பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பெயரில் செப்டம்பர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் குற்றம்சாட்டப்பட்ட விமானப்படை அதிகாரி அமேஷ் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புகார் தெரிவித்த அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, புகாரைத் திரும்ப பெற அழுத்தம் அளிக்கப்பட்டது, மிரட்டப்பட்டது என்று தொடர்ச்சியான அழுத்தங்களை நிர்வாகம் அளித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கேரளாவில் பாடமாகும் பெரியாரின் கருத்துக்கள் – திராவிட தேசியம் என்ற பாடத்தில் சேர்த்த கண்ணூர் பல்கலைக்கழகம்

செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அடுத்த நாள் புகார் தெரிவிக்க சென்றபோது, அவரிடம் குடும்பத்தினர் குறித்து யோசித்து பார்க்குமாறு பெண் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

உயரதிகாரியின்  பேச்சையும் மீறிப் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுப்பதில் தீவிரமாக இருந்ததை தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில், வழக்கமான பரிசோதனையுடன் சேர்த்து, எட்டு ஆண்டுகள் முன்பு உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சோதனையும் செய்யப்பட்டுள்ளது என புகார் தெரிவித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை என முடிவுகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது தவறான தகவல் என பின்னர் தெரியவந்துள்ளது.

‘காங்கிரசுக்குள் நிலவும் உட்கட்சி பூசல்’ – செயற்குழுவை கூட்ட கபில் சிபல் கோரிக்கை

தொடர் அழுத்தங்கள், மிரட்டல்களால் மன அழுத்ததில் இருந்த அவரிடம் புகாரை திரும்ப பெறுவதாக கையெழுத்து பெறப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதை உணர்ந்த அவர், செப்டம்பர் 20 தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி செப்டம்பர் 25 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “காவல்துறைக்கோ அல்லது குற்றவியல் நீதிமன்றத்திற்கோ என்னை விசாரிக்கவோ அல்லது விசாரிக்க முயற்சி செய்யவோ அனுமதி இல்லை. இது ராணுவ நீதிமன்ற நடைமுறைக்கு உட்பட்டது. எனவே, இந்த வழக்கைப் பொறுத்த வரை விமானப்படை தான் விசாரிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகாரளித்த விமானப்படை அதிகாரி  – புகாரைத் திரும்பப்பெற நிர்வாகம் மிரட்டியதாக குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்