பாஜகவில் இணைந்த ஆறு நாட்களில், அக்கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர் பல்விந்தர் சிங் லட்டி.
இன்று(ஜனவரி 3), பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பல்விந்தர் சிங் லட்டி, பஞ்சாப் விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் முன்னிலையில் நேற்று(ஜனவரி 2) இரவு காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியதாக கூறியுள்ளார்.
டிசம்பர் 28 அன்று, டெல்லியில், பாஜகவின் பஞ்சாப் பொறுப்பாளரான ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் ஸ்ரீ ஹர்கோபிந்த்பூரின் சட்டப்பேரவை உறுப்பினரான பல்விந்தர் சிங் லடியும், காடியன் சட்டப்பேரவை உறுப்பினரான ஃபதேஜாங் சிங் பஜ்வாயும் பாஜகவில் இணைந்தனர்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.