Aran Sei

பாஜக தலைமை குறித்து ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு – கைது செய்ய தடை விதித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசாவில் 2019 மக்களவைத் தேர்தலின் போது அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை குறிப்பிடும் வகையில், ‘ஒரு கொலைகாரன் பாஜகவின் தலைவராக முடியும், ஆனால் காங்கிரஸில் இது நடக்காது’ என்று ராகுல் காந்தி பேசியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த பிடியாணையை எதிர்த்து ராகுல் காந்தி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின் முடிவில் ராகுல் காந்தி மீது எந்தவித உடனடியான கைது நடவடிக்கையும் எடுக்கப்பட கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லா மாநிலங்களும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்துங்கள் – அமித் ஷா

இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Source : newindianexpress

பிரியாணி தடை திமுக ஆட்சியை முடக்கும் சதி | Sangathamizhan Interview

பாஜக தலைமை குறித்து ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு – கைது செய்ய தடை விதித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்