Aran Sei

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு –  ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வலியுறுத்தல்

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்று ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 26 ஆம் தேதி 5ஜி அலைக்கற்றைக்காக ஆன்லைன் ஏலம் தொடங்கியது. மொத்தமாக 9 விதமான அலைவரிசைகள் ஏலம் விடப்பட்டன. இதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டலின் ஏர்டெல், கவுதம் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பங்கேற்றன.

6 நாட்களாக 40 சுற்றுகளில் நடைபெற்ற ஏலத்தின் முடிவில், ரூ. 1.5 லட்சம் கோடி பெறப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு – விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற அறிவிப்பு

ஏலத்தின் மூலம் சுமார் ரூ. 4.3 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், வெறும் ரூ. 1.5 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, “அவர் கூறுகையில், “வெறும் 30 மெகாஹெர்ட்ஸ் கொண்ட 2 ஜி அலைகற்றையை நான் ட்ராய் பரிந்துரையின் அடிப்படையில் கொடுத்தபோது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று அன்று இருந்த சிஏஜி வினோத் ராய் ரிப்போர்ட் கொடுத்தார். ஆனால் இன்று ஏலம் விட்டிருப்பது 51 ஜிகாஹெர்ட்ஸ். 2ஜியில் பேச மட்டும் தான் முடியும்.

5ஜியில் இணையத்தின் வேகம் பலமடங்கு அதிகமாக இருக்கிறது. இதன் சிறப்பம்சங்களை எல்லாம் வைத்து பார்த்தால் 5ஜி ஏலம் குறைந்தது 5 லட்சம் கோடி முதல் 6 லட்சம் கோடிவரை ஏலத்தில் சென்றிருக்க வேண்டும். குறைந்த ஏலத்தில் விற்றதற்கு மத்திய அரசின் திட்டமிடலில் நடந்த தோல்வியா அல்லது 45 நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்துவிட்டதா என்பதை விசாரிக்க வேண்டும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை – ஒன்றிய அரசு தகவல்

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து இந்த அரசு விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் இந்த அரசு தூக்கி எறியப்பட்டவுடன் அடுத்த அரசு விசாரிக்கும். 2ஜி ஊழல் என்பது அன்றைக்கு ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக வினோத் ராய் என்ற தனி மனிதரையும், அவர் இருந்த சிஏஜி என்ற அரசியல் சட்ட அமைப்பையும் பயன்படுத்தி எனக்கு எதிராக மிகப்பெரிய சதியை தீட்டினார்கள் என்று எனது புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். ஆனால் இதுவரை வினோத் ராயிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறினார்.

கடந்த 2010ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் ஒன்றிய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை வெளியிட்டார். இதை மேற்கோள்காட்டி நாட்டின் பல்வேறு ஊடகங்களும் 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக என்று செய்தி வெளியிட்டன. அதனைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆராசா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Minnambalam

பச்சை பொய் சொல்லும் Nirmala Sitharaman | திருப்பி அடித்த PTR | Kanimozhi | Jothimani | 5G Scam

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு –  ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வலியுறுத்தல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்