Aran Sei

பசுவை கொல்பவரை மனிதரை கொன்றவராக கருத வேண்டும் – மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி

பசுக்கள் கொல்லப்படுவதை மனிதர்களைக் கொலை செய்யப்படுவதற்கு இணையாகக் கருதுவதோடு, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும் என, மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி கூறியிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாலசூர் மாவட்டத்தில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 28 பசுக்கள் உயிரிழந்தது தொடர்பாகப் பேசும்போது, அவர் இவ்வாறு கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 90 ரூபாயை தொட்டது பெட்ரோல் விலை – சில மாநிலங்களில் லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பனை

தலைநகர் டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ குடியிருப்பில், ஒடியா ஊடகவியலாளர்களிடம் பேசிய சாரங்கி, ”இன்று காலை கொல்கத்தாவில் இருக்கும்போது, இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டேன். இது தொடர்பாக ஒடிசாவில் இருக்கும் உயரதிகாரிகளுடன் பேசியுள்ளேன். கொல்கத்தா மற்றும் வங்கதேசத்திற்கு இந்தப் பசுக்கள் கொண்டு செல்லப்படுகிறது என என்னால் எந்த வித  சந்தேகமும் இன்றி  கூற முடியும்.” எனத் தெரிவித்ததாக தி இந்து கூறுகிறது.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு, அமைச்சர் சாரங்கி எழுதியுள்ள கடிதத்தில், பசுவைக் கொல்பவருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டமான “ஒடிசா பசுமாடு வதை செய்வதை தடுக்கும் சட்டம் 1960” -ல், திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், கர்நாடகவில் நடைமுறைப்படுத்தபட்டிருப்பது போலப், பசுவைக் கொன்றால் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் சாரங்கி கோரியிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பசுவை கொல்பவரை மனிதரை கொன்றவராக கருத வேண்டும் – மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்