Aran Sei

ம.பி: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட வீடு – ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் கொண்டு இடித்த அதிகாரிகள்

Credit : The Indian Express

த்தியபிரதேச மாநிலம் கார்கோனில் பிரதமர் வீட்டு வசதி ( ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஹசீனா ஃபக்ரூவின் வீட்டை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அதிகாரிகள் புல்டோசர் வைத்து இடித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, “எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இது அரசு நிலத்தின் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி அகற்றியுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

வீடு இடிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், நிலப் பதிவேடுகள், தாசில்தார் உத்தரவுகள், வங்கி அறிக்கைகள் ஆகியவற்றுடன் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கான உரிய நடைமுறைகள் ஒத்துப்போகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ம.பி: புல்டோசர் இடிப்புக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

அந்த பகுதியின் செயற்கோள் வரைபடத்தில், ஹசீனாவின் வீடு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது என்று குறிக்கப்பட்டிருப்பதை காட்டுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் வீட்டின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்களில் வீட்டின் வாசலில் வீட்டின் பயனாளர்களான ஹசீனாவும் அவரது மகனும் நிற்பது பதிவாகியுள்ளது. வீடு கட்டும் திட்டத்தின் நிதியுதவியான ரூ. 2.5 லட்சம் கடந்த ஒரு வருடத்தில் வழக்கமான இடைவெளியில் ஹசீனாவின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

”நான்கு தவணை வீதம் மொத்தமாக ரூ. 2 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு ஆக்கிரமிப்பு என்ற நோட்டீஸை தாசில்தாரால் வழங்கப்பட்டது.” என்று ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.

மார்ச் 10 ஆம் தேதி அவரது வீடு ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 4 ஆம் தேதி கடைசி தவணையாக ரூ. 50 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பின்னர், ஏப்ரல் 7 ஆம் தேதி அவருக்கு இரண்டாவது முறை நோட்டீஸ் வழங்கப்பட்டு, அடுத்த நான்கு நாட்களில் அவரது வீடு புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டுள்ளது.

புல்டோசர்களை இயக்குவதை விடுத்து மின் உற்பத்தி நிலையங்களை இயக்குங்கள் – பிரதமருக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

மாவட்ட நீதிமன்றத்திற்கோ உயர்நீதிமன்றத்திற்கோ செல்ல போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கார்கோனில் வகுப்புவாத கலவரம் நடைபெற்ற அடுத்த நாளில் இந்த வீடு இடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தற்செயலானது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டடப்பட்ட மற்றொரு வீடும் சேதமடைந்துள்ளது. லீலா பாய் சாகன் லாலிற்கு சொந்தமான அந்த வீடு, கலவரத்தின்போது கல் வீசித் தாக்கப்பட்டதால், தேசமடைந்துள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால், அந்த வீட்டை இடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Source: The Indian Express

தமிழ்நாடு முழுக்க அரசு Beef Biriyani திருவிழா நடத்தணும் | Sundharavalli | Beef Ban Ambur | MK Stalin

ம.பி: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட வீடு – ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் கொண்டு இடித்த அதிகாரிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்