Aran Sei

‘கோட்சே என் வழிகாட்டி‘ – குஜராத் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியால் சர்ச்சை

குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளியில், ‘கோட்சே என் வழிகாட்டி’ என்றத் தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.

மாநில அரசின் இளைஞர் சேவை மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான திறன் அறிதல் போட்டி குசும் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் நடைபெற்றது.

25 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8 முதல் 12 வயது மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு “வானில் பறக்கும் பறவைகளை மட்டுமே எனக்குப் பிடிக்கும் (I like only those birds who fly in the sky), விஞ்ஞானி ஆவேன், ஆனால் அமெரிக்கா செல்லமாட்டேன் (I will become a scientist but will not go to the America) மற்றும் எனது முன்னுதாரணம் – நாதுராம் கோட்சே (My Role Model – Nathuram Godse) ஆகிய தலைப்புகள் பேச்சுப் போட்டிகாக வழங்கப்பட்டடுள்ளது.

வெளிநாட்டு அதிபர்களுக்கு பிரியாணி ஊட்டுவதால் வெளியுறவு கொள்கை வலுக்காது – மன்மோகன் சிங்

இதில், காந்திய கொன்ற கோட்சேவை முன்னுதாரணம் என்ற தலைப்பில் பேசியவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த தலைப்பிற்கு கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து, மாவட்ட இளைஞர்நலன் மேம்பாட்டு அதிகாரி மிதா கவாலியை பணியிடை நீக்கம் செய்துள்ள குஜராத் அரசு. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் வெட்ககேடானது என விமர்சித்துள்ள குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் பட்டேல், “அரசு அதிகாரிகள் மாநிலத்தில் பாஜகவின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்த முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. காந்தி பிறந்த குஜராத் மாவட்டத்தில், நாதுராம் கோட்சே எனது முன்னுதாரணம் என்ற தலைப்பில் ஒரு போட்டியை நடத்த முன் வந்தனர்.” என தெரிவித்துள்ளார்.

Source :The New Indian Express

‘கோட்சே என் வழிகாட்டி‘ – குஜராத் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியால் சர்ச்சை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்