Aran Sei

இந்தியா: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த வார முடிவில் 79 புள்ளி 87 ரூபாயாக இருந்த நிலையில், 80 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது.

ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக 26 பைசா சரிந்த பிறகு, ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து, திங்களன்று 31 காசுகள் குறைந்து வரலாறு காணாத வகையில் ரூ.80.15 ஆனது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், டாலருக்கு எதிராக ரூபாய் 80.10 ஆகத் தொடங்கியது, பின்னர் 80.15 ஆக மதிப்பை இழந்தது, கடைசி முடிவில் இருந்து 31 பைசா வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இந்து மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ சட்டம்

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. கடந்த ஜூலை 14ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80.21 அளவை தொட்டு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.60 அளவில் இருந்தது.

2000ஆம் ஆண்டுக்கும் 2007ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரூபாய் மதிப்பு நிலையாக இருந்தது. பின்னர் 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 46 அளவுக்கு சரிந்தது.

மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வெழுத லட்சத் தீவில் தேர்வு மையம் – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80 அளவுக்கு சரிந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை, பணவீக்கம், வட்டி விகிதம் போன்ற பல்வேறு காரணங்கள் ரூபாய் மதிப்பை குறைக்கின்றன. வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வேறுபாடு ஆகும்.

டாலரின் ஆதிக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி அண்மையில் ஏற்றுமதியாளர்கள் இந்திய ரூபாயிலேயே கட்டணம் செலுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Ranjith Film on KGF exclusive Update I Natchathiram Nagargiradhu I DOP Kishor Kumar Interview

இந்தியா: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்