Aran Sei

அசைவ உணவு சாப்பிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

ந்தியாவில் இதுவரை இல்லாத அளவு அதிகளவிலான மக்கள் அசைவ உணவைச் சாப்பிடுவதாக ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-2016-ல் நடத்தப்பட்ட ஆய்வை விட 2019-2021-ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் அதிகமான இந்தியர்கள் அசைவ உணவு சாப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-2016-ல் நடத்தப்பட்ட ஆய்வில் கோழி, மீன் உள்ளிட்ட எவ்வித இறைச்சி வகைகளையும் சாப்பிடாத 15-49 வயதுடைய இந்திய ஆண்களின் எண்ணிக்கை 21.6 விழுக்காடாக இருந்தது. தற்போது 2019-2021-ல் நடத்தப்பட்ட ஆய்வில் இறைச்சி சாப்பிடாத ஆண்களின் எண்ணிக்கை 16.6 விழுக்காடாக குறைந்துள்ளது.

பள்ளிகளில் மதிய உணவில் இறைச்சியை நீக்க உத்தரவிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்

அதே சமயம் 2015-2016-ல் நடத்தப்பட்ட ஆய்வில் கோழி, மீன் உள்ளிட்ட எவ்வித இறைச்சி வகைகளையும் சாப்பிடாத 15-49 வயதுடைய இந்தியப் பெண்களின் எண்ணிக்கை 29.9 விழுக்காடாக இருந்தது. தற்போது 2019-2021 இல் நடத்தப்பட்ட ஆய்வில் இறைச்சி சாப்பிடாத பெண்களின் எண்ணிக்கை 29.4 விழுக்காடாக சற்று குறைந்துள்ளது.

அதாவது 2019-2021-ல் இந்தியாவில் 15-49 வயதுடைய 83.4 விழுக்காடு ஆண்களும், 70.6 விழுக்காடு பெண்களும் இறைச்சி உணவை உட்கொள்ளுகின்றனர். ஆனால் இதுவே 2015-2016-ல் 15-49 வயதுடைய 78.4 விழுக்காடு ஆண்களும், 70 விழுக்காடு பெண்கள் மட்டுமே இறைச்சி உணவை உட்கொண்டுள்ளனர்.

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்ற இஸ்லாமிய வியாபாரியை தாக்கிய வழக்கு: பஜ்ரங் தள் உறுப்பினர்கள் 5 பேர் கைது

வாரத்திற்கு ஒருமுறை இறைச்சி சாப்பிடும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. 15-49 வயதுடைய 57.3 விழுக்காடு ஆண்களும், 45.1 விழுக்காடு பெண்களும் வாரத்திற்கு ஒருமுறை கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை உட்கொள்ளுகின்றனர்.

இதுவே 2015-2016-ல் 15-49 வயதுடைய 48.9 விழுக்காடு ஆண்களும், 42.8 விழுக்காடு பெண்கள் மட்டுமே வாரத்திற்கு ஒருமுறை இறைச்சி உணவைச் சாப்பிட்டு வந்துள்ளனர்.

இந்தியாவில் அதிகமான ஆண்கள் அசைவ உணவு சாப்பிடும்  மாநிலங்களில் 98.4 விழுக்காட்டுடன் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (96.1%), கோவா (93.8%), கேரளா (90.1%) மற்றும் புதுச்சேரி (89.9%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

ஹலால் இறைச்சி குறித்த பாஜகவின் சர்ச்சை கருத்து – கர்நாடகாவை உ.பி., ஆகுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

அதே சமயம் குறைவான ஆண்கள் அசைவ உணவு சாப்பிடும் மாநிலங்களில், 14.1 விழுக்காட்டுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில், ஹரியானா (13.4%), பஞ்சாப் (17%), குஜராத் (17.9%), இமாச்சல பிரதேசம் (21.1%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

2015-2016 மற்றும் 2019-2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சிக்கிம் மாநிலத்தில், இறைச்சி சாப்பிடும் ஆண்களின் விகிதம் 49.1 விழுக்காட்டிலிருந்து 76.8 விழுக்காடாக மிக அதிகமான அளவு அதிகரித்துள்ளது. அதே மாதிரி திரிபுராவில் 94.8 விழுக்காட்டிலிருந்து 76.1 விழுக்காடாக குறைந்துள்ளது.

இறைச்சி உணவைச் சாப்பிடும் மக்களை மத அடிப்படையில் பிரித்துப் பார்த்தால், அதிகப்படியாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 15-49 வயதுக்குட்பட்ட 80 விழுக்காடு ஆண்களும், 78 விழுக்காடு பெண்களும் இறைச்சி உணவாக உட்கொள்ளுகின்றனர். அதே போல் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 79.5 விழுக்காடு ஆண்களும், 70.2 விழுக்காடு பெண்களும் இறைச்சி சாப்பிடுகின்றனர்.

‘கிருஷ்ணரின் பிறப்பிடமாக கருதப்படும் மதுராவில் இறைச்சிக்கு தடை’ – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

இந்து மதத்தில், 52.5 விழுக்காடு ஆண்களும், 40.7 பெண்களும் இறைச்சி உணவை உட்கொள்ளுகின்றனர். சீக்கிய மதத்தில் 19.5 விழுக்காடு ஆண்களும், 7.9 விழுக்காடு பெண்களும் இறைச்சி உணவை உட்கொள்ளுகின்றனர். புத்த / நவ-புத்த மதத்தில் 74.1 விழுக்காடு ஆண்களும், 62.2 விழுக்காடு பெண்களும் இறைச்சி உணவை உட்கொள்ளுகின்றனர்.

மீன், கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளை சாப்பிடுபவர்களை விட முட்டை சாப்பிடும் இந்திய ஆண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 2015-16 இல் 80.3 விழுக்காடு மக்கள் முட்டை சாப்பிட்டு வந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 2019-2021 இல் 84.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதே போல் முட்டை சாப்பிடும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கையும் 70.8 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

Source : indianexpress

பாஜகவை திமுக மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview

அசைவ உணவு சாப்பிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்