Aran Sei

பாதுகாப்பு தேவைகளுக்காக ரஷ்யாவை இந்தியா நம்பியிருப்பதை விரும்பவில்லை – அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கருத்து

Credit: NDTV

ந்தியா அதன் பாதுகாப்பு தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

“இந்தியாவும் பிற நாடுகளும் பாதுகாப்பு தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதில், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அவர்களின் இந்தஒ போக்கை ஊக்குவிப்பதில்லை என்பதில் நேர்மையாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அதே நேரம், இந்தியாவுடன் நாங்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு கூட்டாண்மையை நாங்கள் மதிக்கிறோம்.  மேலும், கடந்த வாரம் தெரிவித்ததைப் போல இந்தியாவுடனான உறவை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் முயற்சிக்கிறோம். அது தொடரும், ஏனெனில் அது அவசியமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள்’ – ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியாவை விமர்சித்த அமெரிக்கா

2018 ஆண்டு இந்தியா தனது வான் பாதுகாப்பை அதிகரிக்க ஐந்து எஸ்-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு ரஷ்யாவுடன் 500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. இந்தியா மீது தடை விதிக்கப்பட்டும் என்று அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையை மீறி அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பாதுகாப்பு திறன்களையும் பாதுகாப்பு வல்லுநர்களையும் பன்முகப்படுத்தும் வகையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பைடன் நிர்வாகம் விரும்புகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் டெரெக் தெரிவித்துள்ளார்.

Source: NDTV

பாதுகாப்பு தேவைகளுக்காக ரஷ்யாவை இந்தியா நம்பியிருப்பதை விரும்பவில்லை – அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்