Aran Sei

இந்தியை ஊக்குவிக்கும் ஐநாவின் திட்டம் – ரூ 6 கோடி காசோலை வழங்கிய இந்தியா

Credit: NDTV

ந்தியை பொதுவெளியில் கொண்டு செல்வதற்கான முயற்சி ஒரு பகுதியாக ரூ. 6  கோடியை ஐநா சபைக்கு இந்தியா வழங்கியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள இந்தி பேசும் மக்களுக்கு ஐநா பற்றிய தகவல்களைப் பகிர்வுதற்காக 2018ல் இந்தியாவால் தொடங்கப்பட்ட திட்டத்திற்கான காசோலையை ஐக்கிய நாடுகள் சபைக்கான நாட்டின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர். ரவீந்திரன் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ”ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி பயன்பாட்டை விரிவுபடுத்த இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஐ.நா பொதுத் தகவல் துறையுடன் இணைந்து ஐநாவில் இந்தி என்ற திட்டம் 2018 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தி மொழியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது வெளிப்பாட்டை மேம்படுத்துவதற்கும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்தி பேசும் மக்களிடையே உலகளாவிய பிரச்னைகள்குறித்த அதிக விழிப்புணர்வு பரப்புவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்’: இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து ஜிப்மர் மருத்துவமனை அளித்த விளக்கம் என்ன?

”2018 ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் டிபார்ட்மெண்ட் ஆஃப் க்ளோபல் கம்யூனிகேஷன்ஸ் (டிஜிசி) உடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் டிஜிசியின் செய்திகளை மற்றும் மல்டிமீடியா உள்ளடக்கத்தை ஒருங்கிணைத்து, வெளியிடப்படுகிறது. 2018 ஆண்டு முதல் ஐநாவின் இணையதளம், சமூக வலைதளங்கள், ஐநா முகநூல் பக்கம் ஆகியவற்றில் இந்தியில் செய்திகள் பரப்பப்படுகின்றன.” என்று கூறிப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு வாரமும் ஐநா செய்திகள் இந்தி ஆடியோவில் ஐநாவின் வானொலியில் வெளியிடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: NDTV 

இன்னும் 25000 வீடுகள் அகற்றப்பட இருக்கு | RA Puram Govindasamy Nagar Eviction | Mylapore | Sriram

இந்தியை ஊக்குவிக்கும் ஐநாவின் திட்டம் – ரூ 6 கோடி காசோலை வழங்கிய இந்தியா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்