சர்க்கரை மற்றும் கரும்புக்காக உள்நாட்டில் எடுக்கப்படும் ஆதரவு நடவடிக்கைகள் உலகளாவிய வர்த்தக விதிமுறைகளுக்கு முரணானது என்று உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தக தகராறு தீர்வுக் குழு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீடு உலக வர்த்தக அமைப்பின் (WTO) மேல்முறையீட்டுக் குழுவில் தாக்கல் செய்யப்பட்டது.
கரும்பு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியை ஆதரிப்பதற்கான உள்நாட்டுத் திட்டங்கள் குறித்து சில “தவறான” கண்டுபிடிப்புகளை கொண்டு உலக வர்த்தக அமைப்பின் தகராறு குழு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எங்களால் ஒரு துளிகூட ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா கூறியுள்ளது.
பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகளவில் சர்க்கரையை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும்.
இத்தகைய வர்த்தகப் பிரச்சனைகளில் இறுதி நடுவராக இருக்கும் வர்த்தக தகராறு தீர்வுக் குழு, இப்போதிலிருந்து செயல்படத் தொடங்கினாலும், இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகும்.
இந்த மேல்முறையீட்டு அமைப்பு இந்தியாவின் ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கினால் ஒன்றிய அரசு அதற்குக் கட்டுப்பட்டு, அதற்கேற்ப பல்வேறு மாற்றங்களைச் செய்தாக வேண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகிறார்கள்
Source : TheWire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.