இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் “குறிப்பிடத்தக்க வகையில் மோசமடைந்துவிட்டன” எனக் கூறி, சர்வதேச மத சுதந்தித்திற்கான அமெரிக்க ஆணையம் (யூஎஸ்சிஐஆர்எஃப்) அறிக்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச மத சுதந்தித்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள ‘ஆண்டு அறிக்கை 2022’ என்ற அறிக்கையில், “மத சுதந்திர அளவுகோலில்களில் மிகவும் மோசமாக செயல்படும் அரசாங்கங்களின் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா இடம்பெற்றுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“2022 ஆம் ஆண்டில் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் மத சிறுபான்மையினரை எதிர்மறையாக பாதிக்கும், இந்து தேசியவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து, அமல்படுத்தப்படும் நடவடிக்கைகளை இந்திய அரசு அனுமதித்து வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“நாட்டின் மதச் சிறுபான்மையினருக்கு விரோதமான தற்போதைய மற்றும் புதிய சட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம், தேசிய மற்றும் மாநில அளவில் ஒரு இந்து அரசின் கருத்தியல் கண்ணோட்டத்தை தொடர்ந்து உருவாக்க இந்திய அரசு முயற்சித்து வருகிறது.
இந்தியாவில் விமர்சனக் குரல்கள் ஒடுக்கப்பட்டதை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மத சுதந்தித்திற்கான அமெரிக்க ஆணையம், “காஷ்மீரில் மனித உரிமைகள் ஆர்வலர் குரான் பர்வேஸ் கைது மற்றும் 2020 அக்டோபரில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 80 வயதான அருட்தந்தை ஸ்டான் சுவாமி, ஜூலை 2021ல் மரணமடைந்தது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளது.
“2021 அக்டோபரில், கர்நாடகா அரசாங்கம் மாநிலத்தில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பாதிரியார்களை கணக்கெடுக்க உத்தரவிட்டது மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இந்துக்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு நடத்த காவல்துறைக்கு அதிகாரம் அளித்தது,” என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மத சுதந்திர அளவுகோலில்களில் மிகவும் மோசமாக செயல்படும் அரசாங்கங்களின் பட்டியலில், “ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா மற்றும் வியட்நாம். மியான்மர், சீனா, எரித்திரியா, ஈரான், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
Source: The Hindu
அண்ணாமலை நேரடியா கமலாலயம் வரேன் – விசிக இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் சங்கத்தமிழன் நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.