கடந்த 2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது. இது முந்தைய வருடத்தை விட 15.3% அதிகம் ஆகும்
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கொரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, 2019-ல் பதிவான 4.05 லட்சம் வழக்குகளைவிட 8.3% குறைவாகும்.
கடந்த 2021-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், கணவரால் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்குகளின் பங்கு 31.8% ஆக (1.36 லட்சம்வழக்குகள்) இருந்தது. இது, முந்தைய 2020 உடன் ஒப்பிடுகையில் 2% அதிகம்.
கணவர் அல்லது நெருங்கிய சொந்தங்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பங்கு 2020-ல் 30 சதவீதம் ஆகவும், 2019-ல் 30.9% ஆகவும் இருந்தன.
மேலும், 2021-ல் பெண்களை குறிவைத்து தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் பங்கு 20.8% ஆகவும், அதைத்தொடர்ந்து கடத்தல் (17.6%), பாலியல் வன்முறை (7.4%) ஆகிய பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளும் கணிசமான அளவில் இருந்தன.
பிள்ளையார் சிலைகளை கடலில் கரைத்தால் நீர் வாழ் உரினங்களுக்கு ஆபத்து – பூவுலகின் நண்பர்கள்
2020-ல் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளின் பங்கு 7.5 சதவீதம் ஆகவும், 2019-ல் இது 7.9% ஆகவும் இருந்தன.
எண்ணிக்கை அடிப்படையில் கடந்த 2021-ல் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 31,677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 3,038 பேரும். 6-12 வயது வரையில் 183 பேரும், 6 வயதுக்கும் குறைவானோர் 53 பேரும் அடங்குவர்.
பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எனது கடைசி போராட்டம் – மம்தா பானர்ஜி
2021-ல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1.49 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020-ல் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இது 16.2% அதிகமாகும். 2021-ல் பதிவான குழந்தைகளுக்கு எதிரான மொத்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கையில் கடத்தல் தொடர்பாக பதிவான வழக்குகளின் பங்கு 45% ஆகவும், பாலியல் தொடர்பான வழக்குகளின் பங்கு38.1 சதவீதம் ஆகவும் இருந்ததாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது.
Source: the hindu
பிள்ளையாரை பாஜக மெம்பராக்க துடிக்கும் சங்கிகள் | Maruthaiyan Interview| Vinayagar Chaturthi |Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.