Aran Sei

வங்கத்தில் மீண்டும் தொடங்கியது சிஏஏ எதிர்ப்பு போராட்டம்: பிரதமரின் வருகைதான் காரணமா?

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவானதை முன்னிட்டு,  கடந்த திங்கள்கிழமையன்று நதியா பலசே பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை (சிஏஏ) திரும்பப் பெறக் கோரி சுமார் இரண்டாயிரம் பேர் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மேற்கு வங்கத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து  இந்தப் போராட்டம், மறுபடியும் வலுபெற தொடங்கி இருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும்
(என் பி ஆர்) எதிராக மீண்டும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

‘இம்மண்ணில் இருந்து யாரும், யாரையும் துரத்திவிட முடியாது’ – சிஏஏ குறித்து இஸ்லாமியர்களிடம் முதல்வர் பழனிசாமி உறுதி

போராட்டத்தில் கலந்து கொண்ட கமலாலுதின் ஷேக் என்பவர் டெலிகிராப்பிடம் கூறுகையில், “2019ஆம் ஆண்டு டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் சிஏஏ-விற்கு எதிராக நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இங்குப் பெரும் திரளான மக்கள் ஒன்றுக் கூடிப் போராட்டத்தை நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அப்போராட்டம் அப்போதைய சூழ்நிலையில் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. 2019ஆம் ஆண்டு தொடங்கிய போராட்டம் நேற்றுடன் ஓராண்டு நிறைவடைவதால், அதனை நினைவுக்கூறும் வகையில் மீண்டும் சிஏஏ-விற்கு எதிராக எங்கள்  போராட்டத்தைத் தொடங்கி உள்ளோம். மேற்கு வங்கத்தின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு சிஏஏ-வை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று மத்திய அரசு முனைப்போடு செயல்படுவதாக.” கமலாலுதின் ஷேக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிஏஏ-வுக்கு எதிராக அஸ்ஸாமில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் – மாணவர்கள் மீது காவல்துறை தடியடி

கமலாலுதின் போன்றவர் சிஏஏ சட்டம் முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். ஆனால் மேற்கு வங்கத்தில் சிஏஏ-வை அமல்படுத்துவதில் பாஜகவிற்கு, வங்கதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மட்வாஸ் என்னும் பட்டியல் சமூக மக்களிடமிருந்து அழுத்தம் தரப்படுவதாக டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது.

வங்கத்தில் மீண்டும் தொடங்கியது சிஏஏ எதிர்ப்பு போராட்டம்: பிரதமரின் வருகைதான் காரணமா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்