2020 – 21 நிதியாண்டில் தேர்தல் நிதியாக ரூ. 477.7 கோடியை பாஜக பெற்றிருக்கிறது. மேலும், காங்கிரஸ் ரூ. 74.50 கோடி மட்டுமே நிதியாக பெற்றிருக்கிறது.
தேர்தல் சட்ட விதிகளின்படி ரூ. 20,000க்கு மேல் பெறப்பட்ட நன்கொடைகள் குறித்த அறிக்கையை கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்படி, 2020-21 நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி ரூ. 477.5 கோடியும், காங்கிரஸ் ரூ. 74.50 கோடியும் நிதியாக பெற்றுள்ளன.
மே 31 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இரு கட்சிகளின் நிதி அறிக்கையின்படி, பல்வேறு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ. 4,77,54,50,077 பெறப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஒரு ‘கலப்படமான அரசு’ – மம்தா பானர்ஜி விமர்சனம்
2020-21 நிதியாண்டுக்கான அறிக்கையை இந்த(2022) ஆண்டு மார்ச் 14 அன்று தேர்தல் குழுவிடம் கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.
காங்கிரஸின் நிதி அறிக்கையின்படி, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ. 74,50,49,731 பெற்றுள்ளது.
இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014ஆம் ஆண்டு ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.
Source: TheHindu
நாக்க அடக்கி பேசுங்க Annamalai Journalist Protest Against Annamalai | Journalist Man
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.