Aran Sei

ராஜஸ்தான்: மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திர மேஹ்வால், கொரோனா சிகிச்சை உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர், எப்போதுமே நேர்த்தியான ஆடைகளை அணிந்து காட்சியளிப்பார் என கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள கிராமமான பார்வாவுக்கு சென்றுள்ள ஜிதேந்திரபால் மேஹ்வால், அங்கிருந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

ராஜஸ்தான்: காவல்துறை பாதுகாப்போடு திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்த தலித் ஐபிஎஸ் அதிகாரி

முறுக்கு மீசையுடன் இருந்த அவரது தோற்றத்தையும், அவரது சமூகத்தையும் குறிப்பிட்டு, அந்த இளைஞர்கள் கேலி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜிதேந்திரபால், அந்த இளைஞர்களை தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே விரோதம் உருவானது.

இந்நிலையில், மார்ச் 17ஆம் தேதி, தனது நண்பருடன் ஜிதேந்திரபால் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது, அவர்களை வழிமறித்த ஒரு கும்பல், ஜிதேந்திரபாலை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

குஜராத்தில் குதிரை ஏறியதற்காக தாக்கப்பட்ட தலித் மணமகன் – 28 பேர் மீது வழக்குப்பதிவு

இதில் சம்பவ இடத்திலேயே ஜிதேந்திரபால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, பார்வா கிராமத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான்: மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்