மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவரை மிரட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்மீது அந்த மருத்துவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டவர் இறந்ததையடுத்து, அவருடன் வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்போது பணியில் இருந்த மூத்த மருத்துவர் யோகேந்திர ஸ்ரீவஸ்தவ்வை மிரட்டியதால் அவர் பதவி விலகினார்.
மருத்துவர் யோகேந்திர ஸ்ரீவஸ்தவ்வை மிரட்டியவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்ரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.சி.சர்மாவும் அவரது ஆதரவாளர் யோகேந்திர சவுகானும் ஆவர். மருத்துவர் மிரட்டப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களிலும் பரவி வந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் மூத்த மருத்துவர் யோகேந்திர ஸ்ரீவஸ்தவ் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353,18 யின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
source; the indian express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.