பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், முருகா சரணருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இவ்விவகாரத்தில் காவல்துறை பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சித்தராமையா, சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த சாமியார் சிவமூர்த்தி முருகா சரணரு 4 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தின் தலைவர் சிவமூர்த்தி முருகா சரணரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
குஜராத்: சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்
கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகள் மடாதிபதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அக்கமாதேவி, வார்டன் ரஷ்மி, பசவநித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
“சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்” – பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு சித்ரதுர்கா காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Source: indiatoday
Pa Ranjith view of Communists vs Ambedkarites – G Selva Interview | Natchathiram Nagargiradhu Review
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.