கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். அதில், நான் ஓங்கி முழங்குகிறேன், ஜெய் பீம், அல்லாகு அக்பர் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், கர்நாடகாவிலே பள்ளி கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் பிரச்சனையை நாம் அறிவோம். இது பள்ளி கல்லூரியின் நிலைபாடல்ல, கர்நாடக அரசின் நிலைபாடல்ல, இது இந்திய ஒன்றிய அரசின் நிலைபாடு.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? – பூவுலகின் நண்பர்கள் கேள்வி
ஹரிதுவாரிலே 20 லட்சம் முஸ்லிம்களை கொல்லுவோம் என பேசுகிறார்கள், பிரதமர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார், உள்துறை அமைச்சர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அது குறித்து கருத்து ஏதும் சொல்லவில்லை.
ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் இயக்கத்தை தடை செய்ய வேண்டும், இசுலாமியப் பெண்கள் அரசியலமைப்புச் சட்டத்திலே உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த போக்கை தடுத்து நிறுத்தியாக வேண்டும். இது நாட்டை பிளவுப் படுத்துகிற முயற்சி.
இந்தியர்களை இந்துக்கள் – முஸ்லிம்கள், இந்துக்கள் கிறித்தவர்கள என பிரிக்கிறார்கள், இந்துக்களை சாதிகளாக பிரிக்கிறார்கள்.
இன்றைக்கு ஜெய் ஸ்ரீராம் என்னும் முழக்கத்தின் மூலம் இந்த நாட்டை பிளவுப் படுத்தக்கூடிய சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். இதற்கு மாற்றுக்கு குரலாக ஜெய் பீம் மற்றும் அல்லாகு அக்பர் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது.
பாராளுமன்றத்தில் வரலாறு படைத்த பாஜக – கேள்வி நேரத்தில் பதிலளிக்காத ஒன்றிய அமைச்சர்கள்
எனவே இந்த அவையில் நான் ஓங்கி முழங்குகிறேன் ஜெய் பீம், அல்லாகு அக்பர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.