Aran Sei

’போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும்’ – ஆய்வு மாணவரை நிர்பந்திக்கும் ஐஐடி கவுஹாத்தி நிர்வாகம்

ராய்ச்சி படிப்பைத் தொடர் வேண்டுமானால், இனி ’எந்த வகையான போராட்டத்திலும்’ கலந்து கொண்ட மாட்டேன்’ என்று உறுதியளிப்பது உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான 6 அம்ச ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஹிமாஞ்சல் சிங் என்ற 4 ஆம் ஆண்டு மாணவரை ஐஐடி கவுஹாத்தி நிர்வாகம் நிர்பந்தித்துள்ளது.

எலக்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையின் ஆசிரியராக பணியாற்றிய பி. ராஜேஷ் ராய் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டதற்கு எதிராக, சக மாணவர்களுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கடந்த ஆண்டில் ஒரு செமஸ்டரில் ஹிமாஞ்சல் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஸ்டான் சாமிக்காக இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்

ஐஐடி நிர்வாகத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை கூறிய ராய், ‘தவறான நடத்தை’ மற்றும்’ நிறுவனத்தின் அதிகாரிகளை இழிவுபடுத்த’ முயற்சித்ததற்காக ஜனவரி 1, 2020 ஆம் தேதி அவருக்குக் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.

இத்தனை நாட்களுக்குப் பிறகு மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சிங், வளாகத்தை விட்டு வெளியேறினார். பின்னர், மார்ச் 4 ஆம் தேதி வளாகத்திற்குள் திரும்பும்போது, அடுத்த நாளே அவரது விடுதி அலையை அவர் நிர்பந்திக்கப்பட்டார்.

மார்ச் 8 ஆம் தேதி, ஆறு நிபந்தனைகள் கொண்ட பட்டியலிடும்  உறுதிமொழியில் கையெழித்திட்டால் மட்டுமே ஹிமாஞ்சல் சிங் மீண்டும் அனுமதிக்கப்படுவார் என பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் அனுப்பினார்.

அதில், “வளாகத்தில் உள்ளேயோ அல்லது வெளியிலோ, எந்த வகையான போராட்டத்தில் ஈடுபடமாட்டேன். மேலும், அதற்காக மாணவர்களை அணி திரட்டவோ மாட்டேன். நிறுவனத்தின் கல்வி சூழ்நிலைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செய்திகளையும் சமூக ஊடகங்களில் வெளியிடமாட்டேன்” என உறுதிமொழி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

’தமிழ் கற்பிக்காத கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு’? – வைகோ

நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி வெளியேற்றப்படலாம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பதிலளிக்க ஐஐடி கவுஹாத்தி நிர்வாகம் மறுத்துவிட்டது.

சிறப்பு செனட் குழுவின் பரிந்துரையில் பெயரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் செனட் செயலாளராக இருக்கும் சுரேஷ், ஹிமாஞ்சல் சிங்கிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஏப்ரல் 1 ஆம் தேதி, கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கும் ஹிமாஞ்சல் சிங், ”இந்த உறுதிமொழி பாரபட்சமானது மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 19 (1) வழங்கியிருக்கும் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது” என தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

”எந்தவொரு இந்தியருக்கும் எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை இருப்பதால், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதை நிறுவனத்தால் தடுக்க முடியாது. எந்த அடிப்படையும் இல்லாமல் மேல்முறையீடு மறுக்கப்பட்டது. நிறுவனம் தொடர்பாக எந்த உண்மையையும் தவறாக திரிக்கவில்லை.” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

”நேர்மையற்ற நடைமுறைகளுக்கு எதிராக பேசிய பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது நியாயமற்றது.  பழிவாங்கு நடவடிக்கை என்று உணர்ந்ததால் ஹிமாஞ்சல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் கலந்து கொண்ட அவரது நோக்கம் உன்னதமானது மற்றும் நல்ல நலனுக்கானது. நிறுவனம் நேர்மறையான திசையில் வளர வேண்டும் என்றும் நீதி, நியாயம் மற்றும் உண்மையின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

‘பாஜகவின் அரசியலை செயல்படுத்த நிர்பந்திக்கப்படும் சிபிஐ தனது நம்பத்தன்மையை இழந்துவிட்டது’ – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டிய உத்தரவை ரத்து செய்யுமாறு அவர் நீதிமன்றத்தைக் கோரியபோது, நீதிமன்றம் ஏப்ரல் 9 ஆம் தேதி, செனட்டின் முடிவின் நகலைச் சிங்கிடம் ஒப்படைக்குமாறு நிர்வாகத்திடம் கூறியது. மாணவர் இன்னும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று நீதிமன்றம் கூறியது.

இருப்பினும், கிட்டத்தட்ட ஒரு வருடத்தை அவர் ஏற்கனவே இழந்துவிட்டதால், சிங் கடந்த மாதம் இந்த உறுதிமொழியில் கையெழுத்திட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Source : Indian Express

’போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும்’ – ஆய்வு மாணவரை நிர்பந்திக்கும் ஐஐடி கவுஹாத்தி நிர்வாகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்