தலித் வீட்டில் சாப்பிட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்று பாஜக சட்ட மேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது தலித் வீட்டில் உணவு சாப்பிடுவது பேஷனாகி விட்டது. அரசியல்வாதிகள் தலித் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு தீண்டாமையை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொள்கிறார்கள். தலித் வீட்டில் சாப்பிட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா?. அரசியலுக்காக அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித் வீட்டுக்குச் சென்று, ஓட்டல்களிலிருந்து உணவு, தண்ணீர், டீ வரவழைத்துச் சாப்பிடுகிறார்கள். இது தான் தீண்டாமையை ஒழிப்பதா?
இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வது அம்பேத்கர், காந்திக்கு அவமானம் செய்வது போன்றதாகும். வெறும் அரசியல் விளம்பரத்துக்காக தலித் வீ்ட்டில் சாப்பிடுவதாக நாடகம் ஆடுகிறார்கள். தலித் மக்களும் மனிதர்கள் தான். அவர்கள் வீட்டில் சாப்பிடுவது பெருமையா? என்று எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source : the hindu
வலது சாரி ஆதரவாளர்னா கெட்ட வார்த்தையா? | பதறியடித்து ஓடிய சுமந்து மாம்ஸ் | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.