ஆணின் துணையின்றி பெண்ணால் வாழ முடியாது என்று பெண்கள் எண்ணுவார்களானால் அது சமூக அமைப்பின் தோல்வி என்று கேரள உயர்நீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது
குழந்தைகள் காப்பகத்தில் விடப்பட்ட தனது குழந்தையைத் திரும்பத் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்ற அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி
காப்பகத்தில் விடப்பட்ட குழந்தையின் தாயும், தந்தையும் திருமணமாகாமல் குடும்பம் நடத்தி வந்ததாகவும், இடையில் எழுந்த பிரச்சனையை அடுத்து இருவரும் பிரிந்த நிலையில் , குழந்தையின் நலன் கருதி தாய் குழந்தையைக் காப்பகத்தில் விட்டுள்ளதாக லைவ் லா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் மீண்டும் இணைந்த நிலையில் குழந்தையைக் காப்பகத்திலிருந்து தங்களிடம் ஒப்படைக்க இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
‘இந்தியாவில் மனுஸ்மிருதி எதிர்ப்பே, பெண்ணுரிமை போராட்டம்’ – கவிதா கிருஷ்ணன்
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு , “குழந்தையின் தாய் எல்லா தாய்களை போலவும் தானே பிரசவ வலியையும், அதுபோலவே தானே குழந்தையை நேசித்திருப்பார். அப்படிப்பட்டவர் குழந்தையைக் காப்பகத்தில் விடும் அளவிற்கு சென்றுள்ளார் என்றால் குழந்தையோடு வாழ்வதில் எத்தனை சிக்கலை அவர் உணர்ந்திருக்க வேண்டும் ” என்று கூறியுள்ளதாக லைவ் லா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கணவர் துணையின்றி குழந்தையை வளர்க்க இயலாது என்று அந்தப் பெண் உணர்ந்துள்ளார். ஆணின் துணையின்றி ஒரு பெண்ணால் வாழ முடியாது என்று ஒரு பெண் எண்ணுவாரானால் அது சமூக அமைப்பின் தோல்வியாகும் என்று உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
பொது சிவில் சட்டத்தை பெண்களும் ஏன் எதிர்க்க வேண்டும்? – ஆரிஃபா ஜோஹரி
இதைத் தொடர்ந்து மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ள கேரளா உயர்நீதிமன்றம், ” குழந்தையோடு தனியாக வாழும் பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் ” என்றும் உத்தரவிட்டுள்ளதாக லைவ் லா செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.