Aran Sei

‘இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் தலையிட்டால் உரிய நடவடிக்கை எடுப்போம்’ – எலான் மஸ்க்கை எச்சரித்த சசி தரூர்

ந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் நிறுவனம் தலையிட்டால், உரிய நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் எச்சரித்துள்ளார்.

44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இச்செய்தி உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதை வரவேற்றும் விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 27), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், எலான் மஸ்க்கை எச்சரித்துள்ளார்.

அட்டீவீட்டில், “ஒரு சமூக வலைதள நிறுவனம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இதில் விஷயம் என்னவென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள் என்பதே எங்களுக்கு முக்கியம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ட்விட்டர் சமூக வலைதளமானது இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் தலையிட்டாலோ அல்லது அதற்கு நேர் எதிராக செயல்படும் நோக்கில் எங்களது சமூக சூழலில் வெறுப்புப் பேச்சையும் வசை பாடுவதையும் அனுமதித்தாலோ, பின்னர் தகவல் தொழிற்நுட்ப ஆணையக் குழு நடவடிக்கையை சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளதோடு, எலான் மஸ்கையும் டேக் செய்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயக செயல்பாட்டின் அடித்தளமாகும் என்று எலான் மாஸ்க் கூறியிருந்தார்.

தமிழக அரசு Maridhas ஐ கூப்பிட்டு விசாரிக்கணும்

 

 

‘இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் தலையிட்டால் உரிய நடவடிக்கை எடுப்போம்’ – எலான் மஸ்க்கை எச்சரித்த சசி தரூர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்