“கலவரத்தை விரும்பும் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கட்டும், அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பவர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கட்டும்” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து அடுத்து ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், “கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா 40 விழுக்காடு கமிஷன் வசூலித்ததாக ஒரு ஒப்பந்ததாரர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த கால காங்கிரஸ் அரசு 20 சதவிகித கமிஷன் அரசு. தற்போது இருக்கக்கூடிய பாஜக 40 சதவிகித கமிஷன் அரசு. டெல்லியில் நேர்மையான அரசு இருப்பதால் பூஜ்யம் சதவிகித கமிஷன் ஆட்சி நடைபெறுகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெளடிகள், முரடர்கள், நேர்மையற்றவர்கள் ஊழல்வாதிகள் அனைவரும் ஒரு அரசியல் கட்சிக்குச் செல்கிறார்கள் என்றால் அது ஒரே கட்சிதான். விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றவரின் தந்தை தொடர்ந்து அமைச்சராக உள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணை பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் வகுப்புவாத கலவரங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கலவரங்களை செய்வது யார்? “ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரகாண்ட்: புல்டோசரால் வீடுகள் இடிக்கப்படுவதை நியாயப்படுத்திய முதலமைச்சர்
“மக்கள் கலவரத்தை விரும்பினால் அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கட்டும். ஆனால் அவர்களுக்குப் பள்ளிகள், மருத்துவமனைகள், இலவச மின்சாரம், இலவச போக்குவரத்து, இலவச தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்ற வேண்டுமென்றால், அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மென்மையான மக்கள், தேசபக்தர்கள், நேர்மையானவர்களின் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி இருப்பதால், எங்களுக்கு ரெளடித்தனம் பற்றி எதுவும் தெரியாது.” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
Source: Vikatan
சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.