பாஜகவுக்கு நல்லது என்றால் நாட்டுக்கு ஆபத்தானது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
நான்கு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய பாதுகாப்பு படைக்கு ஆள்சேர்க்கும் திட்டமான அக்னிபத் திட்டத்தை ராகுல் காந்தி எதிர்த்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்தும் அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமரே, உங்களுடைய ‘காலப்போக்கில் மேம்படும் நன்மை’ எனும் திட்டத்தால் நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் அவதிப்படுகின்றனர்.
प्रधानमंत्री जी, आपके 'समय के साथ सुधार वाले फ़ायदों' के परिणाम देश की जनता हर दिन भुगत रही है।
नोटबंदी, गलत GST, CAA, रिकॉर्ड महंगाई, रिकॉर्ड बेरोज़गारी, काले कृषि कानून और अब अग्निपथ से प्रहार।
भाजपा का 'अच्छा' मतलब, देश के लिए घातक।
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2022
பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி, சிஏஏ, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், கறுப்பு வேளாண் சட்டங்கள், இப்போது அக்னிபத்தின் தாக்குதல். பாஜகவுக்கு நல்லது என்றால், நாட்டுக்கு ஆபத்தானது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
Agnipath திட்டம் ராணுவத்தையே முடக்கிடும் EX Indian Army K Malaiappan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.