Aran Sei

பாஜகவில் தாவூத் இப்ராஹிம் இணைந்தால் ஒரே நாளில் புனிதராக்கப்பட்டு அமைச்சராக்கப்படுவார் – உத்தவ் தாக்கரே விமர்சனம்

பாஜகவில் இணைந்தால் ஒரே இரவில் தாவூத் இப்ராஹிம் கூட புனிதராகிவிடுவார் என மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

சிவசேனா கட்சியின் பொதுக்கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு உரையாற்றினார்

மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, “நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது எனக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது என்று பாஜகவினர் தெரிவித்தனர். ஆனால், இன்றோ இந்த அரசு எப்படி செயல்படுகிறது என்று கேட்கிறார்கள். மகாராஷ்டிராவில் எங்கள் அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அது கவிழ்வதற்கான தேதியை குறித்துக்கொண்டே இருந்தார்கள்.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியா – ஜி7 நாடுகளின் வேளாண் துறை அமைச்சர்கள் கண்டனம்.

தற்போது தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளியை ஒன்றிய அரசு தேடி கொண்டிருக்கிறது. ஆனால் ஒருவேளை அவர் பாஜகவில் இணைந்துவிட்டால் ஒரே நாள் இரவில் அவரை புனிதராக மட்டுமல்ல, அமைச்சராகவும் மாற்றிவிடுவார்கள்” என்றும் விமர்சித்தார்.

மேலும் பேசுகையில், “சிலிண்டர் விலை விண்ணை முட்டும் வகையில் இருந்தால், பிரதமர் மோடி கொடுத்த ரேஷன் பொருட்களை எப்படி சமைத்து சாப்பிட முடியும்?” என அவர் கேள்வி எழுப்பினார். இலங்கையில் நடப்பதை நன்றாக பாருங்கள். நாம் அவர்களிடம் இருந்து பாடம் பயில வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கர்நாடகா: கல்வி நிறுவனத்தில் ஆயுதப் பயிற்சி கொடுக்கும் பஜ்ரங் தள்

ஒருமுறை பெட்ரோல் விலை வெறும் 7 பைசா உயர்த்தப்பட்ட காரணத்துக்காக வாஜ்பாய் நாடாளுமன்றத்துக்கு மாட்டு வண்டியில் சென்றார். வாஜ்பாய் காலத்தில் இருந்த பாஜக இப்போது இல்லை. உங்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்து விட்டது  என்றும் என மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Source: TheHindustanTimes

ஈழத்த பத்தி பாஜக வாயவே திறக்க கூடாது Kalanjiyam Interview

பாஜகவில் தாவூத் இப்ராஹிம் இணைந்தால் ஒரே நாளில் புனிதராக்கப்பட்டு அமைச்சராக்கப்படுவார் – உத்தவ் தாக்கரே விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்