Aran Sei

கனடாவை சேர்ந்த அக்‌ஷய் குமார் பேசும் பொழுது ரிஹான்னா பேசக்கூடாதா? – முன்னாள் காங்கிரஸ் எம்.பி திவ்யா ஸ்பந்தனா கேள்வி

னடா நாட்டைச் சேர்ந்த அக்‌ஷய் குமார் இந்தியா குறித்து பேசும்பொழுது ரிஹன்னா பேசக்கூடாதா எனக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிப்ரவரி 3 ஆம் தேதி பிரபல பாப் இசை கலைஞர் ரிஹன்னா, இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகக் கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியின்போது நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் பரவாமல் தடுக்கும் விதமாக, டெல்லியின் சில பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைத் தனது ட்விட்டரில் பகிர்ந்த ரிஹான்னா, விவசாயிகள் போராட்டம்குறித்து நாம் ஏன் பேசவில்லையெனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மனித உரிமைகள் மீறப்படும்போது ஒலிக்கும் அறத்தின் குரல் – இசைக்கலைஞர் ரிஹன்னா

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

விவசாய போராட்டங்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஆதரவு பதிவுகள்குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் கருத்துகள், ”தவறானது” மற்றும் ”தேவையற்றது” என்றும், இது ஒரு ஜனநாயக நாட்டின் உள்நாட்டு பிரச்னை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உண்டு – 2 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகு ஆளுநர் கருத்து

இதனையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவாவின் ட்விட்டர் பதிவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகர் அக்‌ஷய் குமார், “விவசாயிகள் நம் நாட்டின் மிக முக்கியமான பகுதியாக உள்ளனர். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தெளிவாக உள்ளன. வேறுபாடுகளை உருவாக்கும் எவருக்கும் கவனம் செலுத்துவதை விட, ஒரு இணக்கமான தீர்மானத்தை ஆதரிப்போம்.மடிந்த கைகள்#IndiaTogether #IndiaAgainstPropaganda என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அக்‌ஷய் குமாரின் அந்த ட்விட்டை மறு ட்வீட் செய்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, “கனடா நாட்டைச் சேர்ந்த அக்‌ஷய் குமார் பேசும்பொழுது, ரிஹன்னா ஏன் பேசக் கூடாது?. வெளிநாட்டினர் என்றால் அனைத்து நாட்டினரும் தானே?” என அந்த ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

முன்னர், 2019 ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான குட் நியூஸ் படத்திற்கான விளம்பர நிகழ்வில், ”ஆரம்பகாலத்தில் நான் நடித்த 14 படங்களும் தோல்வியடைந்ததை அடுத்து, கனடாவில் குடியேற அந்த நாட்டின் குடியுரிமை பெற்றேன், ஆனால் எனது 15வது திரைப்படம் வெற்றியடைந்ததால், கனடாவில் குடியேறுவது தொடர்பாக மீண்டும் நினைக்கவில்லை” என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக விரைவில் இந்திய பாஸ்போர்ட்டிற்கு விண்ணக்கப்பிக்கவுள்ளதாகவும், இந்தியா டுடே இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கனடாவை சேர்ந்த அக்‌ஷய் குமார் பேசும் பொழுது ரிஹான்னா பேசக்கூடாதா? – முன்னாள் காங்கிரஸ் எம்.பி திவ்யா ஸ்பந்தனா கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்